பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

எங்கள் பழமொழி' என்று விளக்கினர். விருந்தோம்பல் பண்பட்ட மனித குலத்தின் பண்பு என்ற தெளிவு மின்னிற்று.

பள்ளியைப்பற்றி விசாரித்தோம். 'இப்பள்ளியில் படிக்கும் எல்லோரும் இங்கேயே இருந்து படிக்கின்றனர். ஆகவே இது உறையுள் பள்ளி. இங்குள்ள மாணவ மாணவிகள் இசைப் பயிற்சியைச் சிறப்பாகப் பெறுகின்றனர். ஆகவே, இசைப் பள்ளியும், இசை உறையுள் பள்ளியுமாகும்’ என்றார் பள்ளித் தலைவர்.

இதை இசைப் பள்ளி என்கிறீர்களே ! இங்குக் கற்பதெல்லாம் இசைதானை ?'

'இங்குக் கற்றுக் கொடுப்பது இசை மட்டுமன்று. சாதாரணப் பள்ளிக்கூடங்களிலே என்னென்ன மொழிகள், பாடங்கள் உண்டோ, அத்தனையும் இப் பள்ளியிலும் உண்டு. ஒன்றைக்கூட விடுவதில்லை. எல்லாவற்றையும் சொல்லிக்கொடுக்கிறோம். கூடுதலாக இசைப் பயிற்சியும் அளிக்கிறோம்.'

'அப்படியா ? சாதாரணப் பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் அளவு, மொழிகளும் பாடங்களும் சொல்லுவீர்களா ? குறைவாகக் கற்றுக் கொடுப்பீர்களா ?"

'மற்றப் பள்ளிகளில் படிக்கும் அளவு பொதுப் பாடங்களையும் மொழிகளையும் இங்கும் படித்துத் தேற வேண்டும். எதையும் குறைத்துச் சொல்லிக்