46
எங்களுக்காக அன்று. எப்போதும் அப்படித்தான் இருக்குமாம். காத்துக்கொண்டிருப்பவர்கள் விளையாட பிங்பாங் மேசை இருந்தது.
எங்களைக் கண்டதும் நிலைய அதிகாரி வந்து வரவேற்றார். இரயில் ஒட்டியைக் கூப்பிட்டு அறிமுகப்படுத்தினர். இரயில் காவலர் வந்தார். அவருக்கு அறிமுகம் செய்யப்பட்டோம். அவர்கள் எல்லோரும் மாணவிகள். உயர்நிலைப்பள்ளிகளில் படிப்பவர்கள். அந்த இரயிலில் ஏறிப் பயணஞ் செய்ய அழைத்தார், காவலர். எனக்கு அச்சம். தலைவரைத் திரும்பிப் பார்த்தேன். ஆபத்தொன்று மில்லை என்று காவலர் உறுதி கூறினார். துணிந்து, அதில் செல்ல முடிவு செய்தோம். சீட்டு பெறக் காசை எடுத்தோம். விருந்தாளிகளிடம் காசு வாங்கோம் என்று மறுத்துவிட்டனர். இரயிலில் ஏறி உட்கார்ந்தோம். அது குறுகல் (நேரோ கேஜ்) அளவு வண்டி. மெய்யான பெட்டி. விசிறிகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள் பொருந்திய வண்டி. குளிர் காலத்தில் பெட்டிகளுக்குக் கத கதப்பு ஏற்படுத்தும் சாதனமும் பொருத்தியிருந்தார்கள். டீசல் பொறியில் இயங்கும் இருபெட்டி இரயில் புறப்பட்டது. இளங்கம்யூனிஸ்ட் நிலையத்தில் நின்றது. மீண்டும் புறப்பட்டது. பயணியர் நிலையத்திற்குக் கொண்டு சேர்த்தது. இடையிலே டிக்கட் பரிசோதனை நடந்தது. பயனியர் நிலையத்தை அடைந்ததும் இரயில் ஒட்டியும் காவலரும் வந்து எங்களைக் கண்டனர். மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு அழைத்துப் போவதாகக் கூறினர்.