உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பெக் மக்கள், விருந்தோம்புவதில், இந்தியருக்கு இணை. எங்கும் எந்நேரமும் சிற்றுண்டியும் விருந்துமே. முதல் நாள் இரவு துணை அமைச்சரும் பள்ளிகளின் தலைவரும் எங்களோடு இருந்து விருந்து கொடுத்து உபசரித்தனர். கடைசி இரவு, கல்வி அமைச்சரே விருந்தளித்து, நான்கு மணி நேரத்தை எங்களுடன் செலவிட்டார். மனம் விட்டுப்பேசுவதிலும் நம்மைப் போலவே. உங்களுக்கு மணமாகி விட்டதா? எத்தனை குழந்தைகள்? என்ன வயது? எப்போது திருமணம்? ஆகிய சொந்தக் கேள்விகளை இங்கும் அங்கும் கேட்டுவிட்டனர். எத்தனை குழந்தை என்ற கேள்வியைக் கேட்டதும், கண்னிர் விட்டுக் கதறாமல் சமாளித்தேனே, அது பெரிய ஆச்சரியந்தான் !
உஸ்பெக் குடியரசின் பூர்வீக சமயம் இஸ்லாம். இன்று, சோவியத் மண்ணில், மதம் தனி விவகாரம்; பொது, விளம்பர விவகாரமன்று. ஆகவே இன்று எவ்வளவு பேர் இஸ்லாமியர் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அங்கு ஆணேயோ, பெண்ணையோ பார்த்து நடை உடை பாவனையால் இன்ன மதத்தவர் என்று கண்டுகொள்ள முடியவில்லை. எட்டு இலட்சம் மக்கள் உள்ள டாஸகண்டில் பல பக்கமும் சுற்றினோம். ஒரே ஒரு மசூதியை மட்டுமே கண்டோம். தொழுகிறவர்கள் வீட்டோடு தொழுவார்களாம்.
டாஸ்கண்ட் வளரும் நகரம். நகர்ப்புறங் களிலே பழைய சிறு வீடுகள் பலப்பல. அவற்றின் முற்றத்தில் திராட்சைப் பந்தர்கள். நம் வீடுகளில்