உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

"ஆம். அவ்வளவு மட்டுமா ? மாஸ்கோ, கிரெம்லினில் நள்ளிரவாயிருக்கும்போது, சோவியத் ஒன்றியத்தின் கீழ்க்கோடியிலுள்ள 'விலாடி வாஸ்தாக்' என்ற நகரில் மறுநாள் காலே ஏழு மணி யாக இருக்கும்" என்று விளக்கினார்.
"அப்பா! ஏழு மணி வேற்றுமை ஒரு கோடியிலிருந்து மற்றோரு கோடிக்கு ஏழு மணி யென்றால் பரந்த நாடே சோவியத் ஒன்றியம்' என்று எண்ணி வியந்தோம்.
"ஞாயிறு, சோவியத் மண்ணைத் தாண்ட, ஏழு மணியல்ல, பதினாரு மணியாகிறது. மாஸ்கோவிற்கு மேற்கிலும் நெடுந்தூரம் பரவியுள்ளது எங்கள் இணைப்பு. அமெரிக்க ஐக்கிய நாடுகளைக் காட்டிலும் மூன்று பங்கு பெரியது எங்கள் சோவியத் பகுதி என்று பெருமைப்பட்டார்கள் எங்களை அழைக்க வந்தவர்கள்.
இதற்கிடையில் எங்கள் பெட்டிகள் வந்து சேர்ந்தன. சரிபார்த்துக்கொண்டு இரு மோட்டார் களில் மாஸ்கோ நகருக்குச் சென்றோம். வினு கோவா விமான நிலையத்திலிருந்து, மாஸ்கோ நகருக்குச் செல்லும் பாதை அகலமானது. சிமென்ட்டால் போடப்பட்டது. இருமருங்கிலும் உயர்ந்த அழகிய மரங்கள் பூத்துக் குலுங்கின. பட்டை உரிக்கப்பட்ட மரமெதுவும் எங்கள் கண்ணிலே படவில்லை. மழைக்காற்றிலே ஆடி அசைந்து இனிய காட்சியளித்தன. தலைவணங்கி நம்மை வரவேற்கின்றன என்று எங்களை நாங்களே பாாாட்டிக் கொண்டோம்.