57
ஒன்றியத்தின் மக்கள்தொகை ஏறத்தாழ இருபதுகோடி. அவர்களில் பன்னிரண்டு கோடிப் பேர் இரஷியக் குடியரசில் வாழ்கின்றனர். மக்கள்தொகையிலே மட்டுமல்லாது, பரப்பிலும் பெரியது இரஷியக் குடியரசே. அதன் தலை நகரமும் மாஸ்கோ. எனவே, உலக வழக்கில் பலரும், சோவியத் ஒன்றியம் என்பதை இரஷியா என்றே சொல்லிவிடுகின்றனர்.
பரந்து விரிந்து இருக்கும் சோவியத் நிலப்பரப்பிலே பலவகையான தட்பவெப்ப நிலைகள் உள்ளன. நிலவளமும் நீர் வளமும் பலவகையானவை.
இன்றைய இரஷியா முற்காலத்தில் பல அரசுகளாகச் சிதறிக் கிடந்தது. அதை எண்ணிப் பார்க்கும்போது பழைய பாரதம் நினைவிற்கு வந்தது.
அப்போதைக்கப்போது போர் மூளும்; பல்லாயிரவர் முடமாவர். விளைநிலங்களெல்லாம் பாழ் நிலங்களாகும். யாரோ ஒரு மன்னருக்கு வெற்றி: புகழ். அதற்கொரு பரணி. அதைப் பாடின புலவர்க்கு ஒரு பரிசு. இதுவே முந்திய இரஷியாவின் நிலை. ஏன்? போரிடுதல், சிரமறுத்தல் வேந்தருக்குப் பொழுதுபோக்காம். மக்களுக்கோ உயிரின் வாதை. ஆனாலும் அவர்கள் நலனைக் கவனிப்பார் யார்? இப்படிப் போரிலும் வேதனையிலும் நலிந்த இரஷியாவிற்கு 1917-இல் விடுதலை கிடைத்தது. புதுயுகம் தொடங்கிற்று. ஜார் ஆட்சி படபடவெனச் சாய்ந்தது. 1917-இல் சோவியத்தின் சிற்பி தோழர் லெனின் சிற்றுார்