பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

லிருந்துதான் இன்று புகழ் பெற்ற சோவியத் ஆட்சி நடக்கிறது’ என்று விவரித்தார் ஒருவர்.
'பல நூற்றாண்டுகளாக, மெள்ளமெள்ள வளர்ந்திருக்கிறதே இந்நகரம்’ என்று கூறி எங்கள் கவனத்தைக் காட்டிக்கொண்டோம்.
அது அந்தக் காலம். முன்பெல்லாம் அப்படித்தான் வளர முடியும். இன்று நிலைமை மாறி விட்டது. கட்டட அமைப்பிலேகூட விரைவு வந்து விட்டது. 200 மீட்டர் நீள ஆற்றுப் பாலத்தை ஐம்பத்தாறு நாள்களிலே கட்டி முடித்தார்கள் சமீபகாலத்தில். அதுமட்டுமா? கட்டடங்களே அப்படியே நகர்த்தித் தள்ளித் தெருக்களை அகலப் படுத்தக்கூட இப்போது முடியும். போல்வாய் கலுஷ்கயா என்கிற தெரு, முன்பு பதினெட்டு மீட்டர் அகலமானதாக இருந்தது. கட்டடங்களை நகர்த்துவதன்மூலம் அத்தெருவை நாற்பத்தைந்து மீட்டர் அகலமுடையதாக ஆக்கிவிட்டனர் எங்கள் கட்டடப் பொறியர்கள்' என்று அவர்கள் பெருமிதம் கொண்டதில் தவறென்ன? நாங்கள் மாஸ்கோவில் தங்கியிருந்தபோது அத் தெருவை எங்களுக்குக் காட்டிப் பெருமைப்பட்டார்கள்.
மாஸ்கோ நகருக்குள் சென்றுகொண்டிருந்த போது வானத்தைத் தொடும் கட்டடங்கள் சில தென்பட்டன. அவை என்னவென்று விசாரித் தோம். அவற்றில் மிக உயர்ந்த கட்டடம் மாஸ்கோ பல்கலைக்கழகம் என்று சொல்லி அதைச் சுட்டிக் காட்டினார் மொழிபெயர்ப்பாளர். எத்தனை மாடிக் கட்டடம் அது என்றேன்? முப்பத்திரண்டு மாடிக்