உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

கட்டடம்; அதுவே பல்கலைக்கழகம் என்றார், இத்தனை பெரிய கட்டடத்தை எத்தனை ஆண்டுகளில் கட்டி முடித்தார்கள்?’ என்பது அடுத்த வினா.1949ல் கட்டத் தொடங்கினார்கள்; 1959-ல் அதில் பல்கலைக்கழகத்தைக் குடியேற்றிவிட்டார்கள்' என்பது பதில்.
அதோ தொடுவானில் தெரிகிறதே! அக்கட்டடம் இருபத்தேழு மாடிக் கட்டடம். அதில் அயல்நாட்டு விவகார அமைச்சரவையும் அயல் நாட்டு வாணிக அமைச்சரவையும் உள்ளன. அதைக் கட்ட ஏறத்தாழ முப்பத்தாறு மாதங்கள் பிடித்தன.'
இப்படி, வானத்தைத் தொடும் கட்டடங்கள் ஏழு உள்ளன.