உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பல்கலைக்கழகத்தை நிறுவினார். இன்னா செய்தாரை ஒறுத்தல் விரைந்து அவரோடு கணக்குத் தீர்ப்பதா? அப்பிரிவினருக்குப் பாடம் கற்பிப்பதா? பொறுத்து வளர்ந்து, எல்லோருக்கும் நன்னயம் செய்தலே என்று எடுத்துக் காட்டிக்கொண்டு விளங்குகிறது மாஸ்கோ பல்கலைக்கழகம். பள்ளிக்கூட இடம்கூடக் கிடைக்காத மீனவச் சிறுவன் தன் உழைப்பால் உயர்ந்த பிற்கால மேதை லொமன சன்னிற்கு உயிருள்ள நினைவுச் சின்னம் அது. வறியவர் வளர்ந்தால் வையம் வளரும். பெரியவர் வளர்ந்தால் சுற்றம் வளரும்! என்பது எவ்வளவு பெரிய உண்மை பாருங்கள்.