81
நால்வரும் உள்ளே வந்துவிட்டோம். வாயிற்படியில் ஏமாந்ததைப்பற்றி நான் வெட்கப்பட்டேன். இனி பாதாள இரயில்வே பிளாட்பாரத்தை அடைய வேண்டும். எப்படி அடைவது ? படிப்படியாக இறங்கியா ? இல்லை. எஸ்கலேட்டர்மூலம். தாமி யங்கும் படிகள் எஸ்கலேட்டர் என்பது. ஆள், எஸ்கலேட்டரின் முதற்படியில் சட்டென்று கால் வைத்து நிற்கவேண்டும். பக்கத்திலுள்ள கைப் பிடியை ஒரு கையால் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். அது தானே இயங்கி, நமக்கு வேலையில்லாமல், கீழே கொண்டு சேர்க்கும். பிளாட் பார நிலைக்கு வரும்போதும், விரைவாக அதிலிருந்து தரையிலே கால் வைத்துவிடவேண்டும். மேலே வருவதும் அப்படியே. எஸ்கலேட்டரின் கீழ்ப்படி யில் கால் வைத்து நின்றுவிட்டால், மேல் மட்டத் திற்கு அதுவே கொண்டு வந்துவிடும். மேல் மட்டத்திற்கு வந்ததும் தயங்காமல் தரைமேல் நடந்து விட வேண்டும்.
பத்தாண்டுகளுக்கு முன், இங்கிலாந்திற்குச் சென்றபோது நான் இருமுறை எஸ்கலேட்டரில் செல்ல நேர்ந்தது. அப்பயணம் எனக்குப் பிடிக்க வில்லை. ஆகவே மாஸ்கோ இரயில் நிலையத்திற்குள் எஸ்கலேட்டரைக்கண்டதும் எப்படியோ இருந்தது. வேறு வழியாகக் கீழே இறங்க முடியாதா என்று கேட்டேன். அம்மையார் பதில் சொல்லும் வரையில் காக்கவில்லை மற்றிரு நண்பர்களும். எஸ்கலேட் டரில் ஏறிவிட்டனர். வெட்கம் பிடித்துத் தள்ள