பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

வண்டிகள் வலப்புறம் போகவேண்டும். சில நாள்கள் வரை இது எங்களுக்குக் குழப்பமாகவே இருந்தது. இடப்பக்கம் வலப்பக்கமானல் குழப்பம் தானே?
பயண வண்டிகள் ஏராளம். அதைவிட ஏராளம் பயணஞ் செய்வோர். பெரும்பாலும் வண்டிகள் நிற்குமிடங்களில் பலவற்றில் நீளமான மக்கள் வரிசைகளைக் காணலாம். வண்டி வந்து நின்றதும் தள்ளிக்கொண்டு. போக மாட்டர்கள்; வரிசைப் படியே ஏறுவார்கள். சில வேளை இரண்டு மூன்று பஸ்கள் வரை காத்திருக்க நேரிடுமாம். எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் ஆத்திரக் குறிகளைக் காணுேம் அவர்கள் முகங்களில். பொறுத்திருக்கப் பழகிவிட்டார்கள் போலும்.
இவற்றைப் பார்த்தபடியே நடந்தோம். வழியிலே தெரு மூலையில் ஒரு பானக்கடை. அதைச் சுற்றி நின்று குளிர்பானம் வாங்கி அருந்திக் கொண்டிருந்தனர். அப்பானமும் இயந்திரத்தின் மூலம் கிடைத்தது. உரிய காசை இயந்திரத்தின் துளைக்குள் இட்டதும் குழாய் வழியாகப் பானம் வருகிறது. அதைக் கண்ணாடிக் குவளையில் பிடித்துக் குடிக்கலாம். மற்றோரு பக்கம் ஐஸ்கிரீம் வாணிபம் நடந்தது. பெரியவர்களும் சிறியவர்களும் அதை வாங்கி வைத்துக்கொண்டு நின்றபடியே சாப்பிட்டார்கள்.
மாஸ்கோவாசிகள் அதிகம் விரும்பி உண்பது ஐஸ்கிரீம். இது வெறும் தின்பண்டம் மட்டுமன்று;