86
பெற்றாகவேண்டும். அப்போதுதான் அவர் அடுத்த சம்பள உயர்வு பெறமுடியும்' என்று கேள்விப்பட்டோம்.
மறுபயிற்சியின் மூலம் ஆசிரியரின் மூளை துருப்பிடிக்காதபடி பார்த்துக்கொள்ளுகிறார்கள். அதற்காகத் தனிக் கல்விக்கூடங்களேயே வைத்திருக்கிறார்கள். அவற்றிலே ஒன்று இப்பள்ளிக் கூடம்.
'பல மறுபயிற்சிக் கூடங்களிலே ஒன்றன்று இது. அத்தனை கூடங்களுக்கும் தலைமையானது இது. இங்குதான் மறுபயிற்சித் திட்டங்கள் உருவாகின்றன. பல பாடங்களுக்கும் பயிற்சித் திட்டம் போடுகிறோம். கல்வித் துறையில் ஈடுபட்டுள்ள பலவகை அலுவலர்களுக்கும் மறுபயிற்சித் திட்டம் வகுக்கிறோம். இங்கு ஆலோசித்துக் கலந்து பேசி, சோதனை செய்து பார்த்து, வகுக்கும் பயிற்சித் திட்டங்களையும் வேலே விவரங்களையும், பல பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கிறோம்?' என்று, அக்கூடத்தின் தனிப் பொறுப்பையும் நிலையையும் எடுத்துக் காட்டினர்
கல்வித் துறையில் ஈடுபட்டுள்ள பலவகை அலுவலர்களுக்கும் மறுபயிற்சித் திட்டம் என் றிர்களே ! அப்படியானால் மறுபயிற்சிக்கு உட்பட வேண்டியது, ஆசிரியர்கள் மட்டுமல்லவா?” என்றோம்.
'கல்வித் துறையில் ஆசிரியர்களே பெரும்பாலானவர்கள். ஆகவே ஆசிரியர் மேற்பயிற்சிக்