உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

கூடம் என்று பெயரிட்டிருக்கிறோம். ஆனால், அவர்கள் மட்டுமல்லர் இங்கு மறுபயிற்சி பெறுவது, பள்ளிக்கூட ஆய்வாளர்கள், பள்ளி நிர்வாகிகள் (அனைவரும் அரசு ஊழியர்கள்), அங்கவீனமுடையோர் பள்ளிகளின் தலைவர்கள், ஆய்வாளர்கள். பெரும் கல்வி அதிகாரிகள், கல்வித் துணை அமைச்சர்கள் ஆகியோர் யாவரும் மறுபயிற்சி பெறுகிறார்கள்’ என்றார்.
கல்வித் துணை அமைச்சர்கள் மறுபயிற்சிக்கு வருகிறர்கள் என்று கேட்டதும் வியப்பில் ஆழ்ந்தோம். பின்னர், அக் கல்விக்கூடத்தைச் சுற்றிப் பார்த்து வரும்போது, மறுபயிற்சிபெறும் துணை அமைச்சர் ஒருவரை எங்களுக்கு அறிமுகப்படுத் தினர். அப்போதுதான் நம்பிக்கை வந்தது.
மறுபயிற்சிக் காலம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? நல்லது. சாதாரணமாக அது ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை இருக்கலாம். இதற்குள் திட்டமாக எவ்வளவு காலம் என்பது, பெற வேண்டிய மறுபயிற்சியின் தன்மையைப் பொறுத்ததாம்.
ஒரே நேரத்தில், எத்தனை பேர், பல பாடங்களிலோ முறைகளிலோ மறுபயிற்சி பெறுவார்கள்?" என்று கேட்டோம்.
ஏறத்தாழ, 200 பேர்கள்' என்று தெரிந்து கொண்டோம்.
நாங்கள் கண்ட அக்கல்விக்கூடத்தில் ஆண்டொன்றிற்கு, 2,500 பேர்கள் மறுபயிற்சி பெறு