பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

கிறார்கள். அவர்கள் பெறும் மறுபயிற்சி. தொழில் நுட்பத்தில் மட்டுமா? இல்லை. பாட அறிவிலும் முன்னேற்றும் மறுபயிற்சிகள் உண்டாம்.
அம் மத்திய மறுபயிற்சிக் கூடத்திற்கு ஒவ்வொரு குடியரசிலிருந்தும் ஆசிரியர்களும் மற்றவர்களும் வருகிறார்களாம். அவர்கள் வந்துபோகச் செலவுப் பணத்தை அரசினர் கொடுக்கிறார்களாம். மறுபயிற்சியின்போது உறைவிடம் இலவசம். மாஸ் கோவில் சாப்பாட்டுச் செலவிற்காக, மாதம் 40 புது ரூபிள் கொடுப்பார்களாம். தங்கள் கையைக் கடிக்காததால், மறுபயிற்சிக்கு வர மயங்கவோ, தயங்கவோ மாட்டார்கள். மறுபயிற்சி பெறும் எல்லோருக்கும் சான்றிதழ் உண்டு.
சோவியத் ஒன்றியம் முழுவதற்கும் மைய மறு பயிற்சி நிலையமாக விளங்கும் அக் கல்விக்கூடத்திலேயே எல்லோரும் முழுநேர ஊழியம் பார்க்கிறார்களா? இல்லை. சிலரே, அக்கூடத்தின் முழு நேர ஊழியர்கள். பலர், வேறு பள்ளிகளிலும் பிற கல்வித்துறை அலுவல்களிலும் முழுநேரம் பணியாற்றும் முதிர்ந்த அனுபவசாலிகள். இப்பள்ளியில் சில மணி நேரமே பணிபுரிகின்றார்கள்.
மறுபயிற்சிக்கே, இவ்வளவு பெரும் ஏற்பாடுகள் இருந்தால், முதல் பயிற்சிக்கு எத்துணைச் சீரான ஏற்பாடுகள் இருக்கவேண்டும்? உங்களுக்காக, நாங்கள், அதை அறிந்துகொண்டு வந்தோம்.