இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
91
அடுத்த நாள் பார்த்த ஓர் 'ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில்' இதைப் பற்றிய தகவல்களையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டோம்.
கல்வியின் நிலை ஆசிரியரின் தரத்தைப் பொறுத்தது. ஆசிரியத் தொழில் நுட்பமான ஒன்று. அதற்குப் போதிய பயிற்சி வேண்டும். அத் தொழில் பயிற்சி பெறுவோர்க்கு அதிகமான பொதுத் தகுதியும் தேவை. இவற்றை உணர்ந்து இருக்கிருர்கள் சோவியத்து ஒன்றியத்தின் கல்வியாளர்கள்.