பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1) பயிற்சிப் பள்ளியில்!

அடுத்த நாள் காலை. மாஸ்கோ நகரில் உள்ள இரண்டாம் எண் உள்ள ஆசிரியப் பயிற்சிப் பள்ளியைப் பார்வையிட்டோம். சோவியத் ஒன்றியத்தில் பள்ளிக்கூடங்களுக்கு, பெயர்களுக்குப் பதிலாக எண்கள் கொடுப்பது முறை. மாஸ்கோவில் உள்ள பல பயிற்சிப் பள்ளிகளில், இது இரண்டாவது ஆகும்.

அப் பள்ளிக்குள் நுழைந்ததும், அண்ணுந்து பார்த்தோம். உயர்ந்த அழகிய கட்டடம் தென் பட்டது. உள்ளே நுழைந்ததும், பள்ளிக்கூட இயக்குநருக்கு (தலைமை ஆசிரியருக்கு) அறிமுகம் செய்யப்பட்டோம். எங்கள் முதல் கேள்வி இது எத்தனை அடுக்குக் கட்டடம்?’ என்பதே. இது ஐந்தடுக்குக் கட்டடம் என்று தெரிந்துகொண்டோம். பயிற்சிப் பள்ளிக்கு ஐந்தடுக்கு மாளிகையா என்று திகைத்தோம். அவ்வளவும் தேவை என் பதை எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்த பிறகே உணர்ந்தோம்.

'இவ்வளவு பெரிய கட்டடத்தைக் கட்ட எவ்வளவு காலம் ஆயிற்று? - இது எங்களில் ஒரு வரிடமிருந்து பிறந்த கேள்வி.

'பத்து மாதங்களே பிடித்தன. இது 1953-ல் கட்டப்பட்டது' என்று தலைமையாசியர் கூறினார்.