93
பத்துத் திங்களிலே ஐந்தடுக்கு மாளிகையைக்கட்டி முடித்தார்கள் என்பது வியப்பாக இருக்கிறதா? ஆளுல் உள்ள கட்டடத்தையே நிலத்தோடு பெயர்த்துப் பல அடி துரம் நகர்த்தும் சோவியத்துப் பொறியாளர்களுக்கு இது பிரமாதமன்ற
இப் பயிற்சிப் பள்ளியில், எந்நிலை ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்கிருர்கள்? இருநிலை ஆசிரியர்கள் அங்குப் பயிற்சி பெறுகிறர்கள். கிண்டர் கார்டன்” பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இங்குப் பயிற்சி கொடுக்கிருர்கள். இரு பிரிவினர், தனித்தனி பயிற்சி பெறுகின்றனர்; தனித்தனி தேர்வு எழுதித் தேறுகின்றனர். உரிய சான்றிதழ் பெற்றுக்கொண்டு செல்கின்றனர்.
அவர்களது பொதுக் கல்வித் தகுதி ஒன்ரு? அவர்களது பயிற்சிக் காலம் எவ்வளவு?
'கிண்டர் கார்டன்' பள்ளிகளில் வேலை செய்யப் பயிற்சி பெறும் ஆசிரியர்கள், நடுநிலைப் பள்ளி வரையில் படித்துத் தேறியிருந்தால் போதும்; முன்பெல்லாம் ஏழாவது தேறியவர்களாக இருக்கவேண்டும்; இப்போதோ எட்டாவது தேறியவர்களையே சேர்த்துக்கொள்வார்கள்.
தொடக்கப்பள்ளி வேலைக்குப் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் எவ்வளவு படித்துத் தேறியிருக்க வேண்டும்? அப் பயிற்சிக்கு இருவகையானவர்களைத் தேர்ந்தெடுக்கிருர்கள். ஒருவகையினர், எட்டாவது தேறியவர். அப்படிப்பட்டவர்கள்