95
நான்கு ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிபெற வேண்டுமாம். முதல் இரண்டு ஆண்டுகளில் அவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதில்லை. கணக்கு, மொழி, வரலாறு ஆகிய பொதுப்பாடங்களையே கற்கிறார் களாம். கடைசி இரண்டு ஆண்டுகள்மட்டுமே, ஆசிரியத் தொழில்பற்றிய கொள்கைகள், துணுக்கங்கள், முறைகள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். அவற்றில் நேரடிப் பயிற்சியும் பெறுகிறார்களாம். இவர் ஒருவகையினர்.
மற்றோரு வகையினர் பள்ளி யிறுதி வரையில் படித்துத் தேறியவர். இவர்களுக்குப் பயிற்சிக் காலம் இரண்டே ஆண்டாம். இவர்கள் பொதுப் பாடங்களை இங்குப் படிப்பதில்லை; தொழிற் பயிற்சியில் புகுந்து விடுகிறார்கள். இவற்றிலிருந்து அறிவது என்ன? எட்டாவது தேறியவர்களைப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துக்கொண்டாலும் அவர்களது படிப்புத் தரத்தைப் பள்ளி யிறுதிநிலை வரையில் வளர்த்த பிறகே ஆசிரியப் பயிற்சியைத் தொடங்குகிருர்கள். பள்ளி யிறுதி வகுப்பில் தேறா வர்கள், இக்கால ஆசிரிய வேலைக்கு ஏற்றவர்கள் அல்லர் என்பது சோவியத்து அரசினரின் முடிவாகும். ஆகவே, வருங்காலத்தில் எட்டாவது தேறியவர்களைச் சேர்ப்பதில்லை யென்றும் இறுதி வகுப்புத் தேறியவர்களே ஆசிரியர் பயிற்சிக்கு வரலாம் என்றும் அண்மையில் கட்டளை பிறப்பித்து உள்ளனராம்.
இத் தகவல்களைத் தெரிந்துகொண்டு, பள்ளிக் கூடத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம்.