96
தலைமை ஆசிரியர் எங்களை அழைத்துச் சென்றார், முதலில் கண்டது, பயிற்சியாளர் அனைவரும் சேர்ந்து செய்த உடற்பயிற்சி. இது கச்சிதமாகவும் சிறப்பாகவும் இருந்தது. இது அன்றாட நிகழ்ச்சியாம். இது முடிந்ததும், இசைப் பயிற்சி வகுப்பிற்குச் சென்றோம். பயிற்சி பெறும் ஆசிரியர் ஒவ்வொருவரும், இசைப் பயிற்சியும் செய்ய வேண்டுமாம். அவர்களை மும்மூன்று பேர்களாகப் பிரித்து இசைப் பயிற்சி கொடுப்பார்களாம். வாரத்தில் இரண்டு மூன்று மணிகள் இசைக்கு ஒதுக்குகிருர்களாம். எத்தகைய இசைப் பயிற்சி அங்குக் கிடைக்கிறது. வெறும் நாடோடிப் பாட்டுப் பயிற்சியா?
இல்லை. பிடில், பியானோ ஆகிய இசைக் கருவிகளே வாசிக்கவும் பயிற்சி பெறுகிருர்கள் எல்லோரும். இசையிலே தனித்திறமையுடையவர்கள் ஒய்ந்த நேரத்தில், கூடுதலாகக் கற்றுக் கொள்ளலாம்.
இங்கு 200-பிடில்களும், 22-பியானோக்களும் உள்ளன என்று பெருமைப்பட்டார் தலைமை ஆசிரியர். அவற்றில் பலவற்றை நேரில் கண்டோம். இசைக் கருவிகளே இத்தனை இருந் தால், பயிற்சி பெறுவோர் ஏராளமானவர்களாக அல்லவா இருக்கவேண்டும்?' என்று கேட்டோம்.
'ஆம். இப் பள்ளியில் மொத்தம் 640 பேர் பயிற்சி பெறுகிறார்கள்' என்றார்.
'640 பேருக்கு ஆசிரியப் பயிற்சி கொடுக்க எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர் ?'