பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

பயிற்சி மாணவர்கள் செய்துள்ள பாடத் துணைக் கருவிகளைக் கானும் வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொன்றையும் நேர்த்தியாகச்செய்திருந்தார்கள். இரு அறைகள் பூராவும், அவற்றைக் காட்சியாக அமைத்திருக்கிருர்கள். அட்டை வேலை, தச்சு வேலை, கருமார் வேலை, தையல் வேலை ஆகியவற்றின் செய்பொருள்கள் எங்கள் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்தன.

ஒவ்வொரு மாணவரும் கை வே லே க ள் இரண்டில் பயிற்சி பெறவேண்டுமாம். இசைப் பயிற் சியைக் கண்டோம். கைவேலைகளில் பயிற்சி பெறுவதை அறிந்தோம். பாடப் பயிற்சி எப்படி? இக் கேள்வியைக் கேட்டோம். இவர்கள், தொடக்க வகுப்புகளில் வேலை செய்ய வேண்டியவர்கள்; நான்காம் வகுப்பு வரையில்மட்டுமே கற்பிக்கலாம். அவ் வகுப்புகளிலுள்ள எல்லாப் பாடங்களையும் கற்பிக்கப் பயிற்சி பெறுகிறார்கள் என்று சொன்னார் .

அவர்களே பாடம் நடத்திக் காட்டுகிருர்களா? ஆம். ஒவ்வொரு மாணவரும் மொத்தத்தில் பதினைந்து பாடங்களை நடத்திக் காட்ட வேண்டுமாம். பயிற்சி பெறும் மாணவர்களில் பத்துப் பேருக்கு ஒரு மேற்பார்வையாளர் வீதம் வேலைகளே வகுத்துள்ளனர். பயிற்சியாளர்கள் நடத்திக் காட்டும் பாடங்களுக்கு மதிப்பெண் தருகிருர்கள் மதிப்பெண்கள் சான்றிதழில் குறிக்கப்படும்.

வகுப்புப் பாடங்களையும் கைவேலைகளையும் கற்பிக்கப் பயிற்சி பெறுவதோடு, மாணவர்