பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

முகாம்களை நடத்தவும் பழகிக்கொள்கிறார்கள். சாரணர்கள், வழிகாட்டிகள் ஆகியோரின் இயக்கம் அங்குக் கிடையாது. அதற்குப் பதில் ’பயணியர்’ இயக்கம் உண்டு. அது இளைஞர்களுக்கானது. இருபாலாரும் இதிற் சேரலாம். ’பயணியர்’களுக்காக எண்ணற்ற முகாம்கள் நடைபெறுகின்றன. ஆசிரியப் பயிற்சியாளர் ஒவ்வொருவரும் அத்தகைய முகாம் ஒன்றில் ஒரு மாதம் கலந்து அதை நடத்தும் பயிற்சியும் பெறுகிறார்கள்.

சோவியத்து ஆசிரியர்கள் பெறும் முதற் பயிற்சி எப்படியிருக்கிறது? பள்ளிப் பிள்ளைகளின் எல்லா ஈடுபாடுகளுக்கும் பொறுப்பு ஏற்கும் வகையில் அவர்களைச் செய்துவிடுகிறது.

பயிற்சிக் கால இறுதியில் அரசினரால் நடத்தப்படும் பொதுத் தேர்வு உண்டு. அதில் தேறினவர்களே ஆசிரியர் தொழிலுக்குப் போகலாம். எல்லோரும் தேறுகிறார்களா எனக் கேட்கிறீர்களா? ’யாராவது தவறுகிருர்களா?' என்பதே அந்நாட்டின் நிலைக்குப் பொருத்தமான கேள்வி. 'தவறுவது அத்திப் பூத்தாற்போல்' என்பதே விடையாகும்.