பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

நாடக சங்கம் இவரது நடிப்புக்கலையை மெச்சி ஓர் பொற்பதக்கம் அளித்தனர். இவர் தேசிய பாதுகாப்பு நிதிக்கு பெரும் பொருளை தாராளமாக கொடுத்துள்ளார். அன்றியும் பல எளிய நடிகர்களுக்கு அவர்களுடைய கஷ்டகாலத்தில் பொரு ளுதவியும் செய்திருக்கிறார். இவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து அவ்வாறே செய்யவேண்டுமென்று கோருகிறேன்.

திரு. டி. கே. பகவதி

தமிழகத்தின் தலைசிறந்த நாடகக் கலைஞர்களான டி. கே. எஸ். சகோதரர்கள் நால்வரில் திரு. டி. கே. பகவதி நான்காவது சகோதரர். இவர் 11—2—1918-இல் பிறந்தார். இவர் தமது 7-வது வயதிலேயே மதுரைத் தத்துவமீன லோசனி வித்துவ பால சபாவில் நடிகராக சேர்க்கப் பெற்றார். 1925-இல் சகோதரர்களின் ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை துவக்கப் பெற்றதும், அதில் சில்லரை வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். சின்னஞ்சிறு வயதில் இவர் பெரும்பாலும் நகைச் சுவை யளிக்கும் 'பபூன்' வேடங்களிலேயே தோன்றினார். டி. கே, பகவதி தன் சகோதரர் திரு டி. கே முத்துசாமியிடமும் ஆசிரியர் திரு. எம். கந்தசாமி முதலியாரிடமும் நாடகப் பயிற்சி பெற்றார். இளமைப் பருவத்திலேயே ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா முதலிய நாவல் நாடகங்களில் இவர் கதா நாயனாக அருமையாக நடித்தும், பாடியும் பெருமை பெற்றிருக்கிறார்.

டி. கே. பகவதி கதாநாயக வேடங்களில் நடித்தபோது இவருக்கு நாயகியாக நடித்தவர் நடிப்புப் புலவர் திரு. கே. ஆர் ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது. 1935-ஆம் ஆண்டு முதல் டி. கே. பகவதி பல்வேறு நாடகங்களில் பிரதம பாகத்தை ஏற்று நடிக்கத் தொடங்கினார். 1939-இல் 'சிவலீலா' நாடகத்தில் சிவபெருமானுடைய பல்வேறு வேடங்களில் நூற்றுக் கணக்கான நாடகங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். தமிழ் வரலாறு நாடகங்களில் கதா நாயனாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தபோது இவரது பெருமை மேலும் ஓங்கியது. இமயத்தில் நாம், இராஜ ராஜசோழன் முதலிய நாடகங்களில் சேரன் செங்குட்டுவன், இராஜராஜ சோழன் ஆகிய வேடங்கள் இவருடைய அபார நடிப்புத் திறமைக்குச் சான்றாக விளங்கின. ராஜராஜ சோழன் என்னும் நாடகம் அரு, ராமநாதன் அவர்கள் எழுதியது அமரர்