பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

பின் இந்த கம்பெனி கலைந்துவிட்டது. மிகவும் பொருள் தீட்டிய பாலாமணியும் வறுமையில் அகப்பட்டுக் கஷ்டப் பட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன்.

ஸ்ரீமான் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார்

'இவராவது நாடகத்தில் நடித்ததாவது' என்று இதை வாசிக்கும் எனது நூறு நண்பர்களில் 99 பேர் ஆச்சரியப்படுவார்கள். ஆயினும் இவர் சுகுணவிலாச சபையில் இரண்டொருமுறை நடித்திருக்கிறார். அவர் முதன்முதல் நடித்தது எனது சமூக நாடகமாகிய 'பொன் விலங்கு’ என்பதில் தான் நான் ராமச்சந்திரன் வேடம் பூண்டபோது எனது மைத்துனனுகிய வேடம் தரிக்கும்படி செய்தேன். அதில் இவரை தேர்ச்சி பெறச் செய்வது எனக்கு மிக்க கடினமான காரியமாயிருந்தது. சிறந்த கல்விமானுகிய இவருக்கு ஞாபகசக்தி மாத்திரம் கொஞ்சம் குறைவு. அதற்காக பன்முறை இவரை ஒத்திகையில் கஷ்டத்துக்குள்ளாக்கினேன். நாடக தினத்தில் சுமாராய்தான் நடித்தார். ஆயினும் இவருக்காக வலதுபுறம் சைட் படுதா அருகில் ஒரு புராம்டரும் இடதுபுற சைட் படுதா அருகில் மற்றொரு புராம்டரும் ஏற்பாடு செய்தேன். நடிகருக்கு இருக்கவேண்டிய முக்கிய குணமாகிய தன்னை மறந்து தான் மேற்கொண்ட பாத்திரமாக நினைத்திருக்க வேண்டிய குணம் இவரிடம் மிகவும் குறைவு. ஆயினும் ஒரு விதத்தில் சபை நடத்திய நாடகங்களுக்கு நடிப்புக் கலையிலும் சங்கீதக் கலையிலும் தன் ஆயுள் உள்ளவரை மிகவும் உதவி புரிந்துவந்தார். என் வழக்கம் ஒரு நாடகத்தின் கடைசி ஒத்திகைகளில் இவரை அழைத்து உட்காரச் செய்து நடிகர் களுக்கு அவர்கள் குற்றங்களை எடுத்துக்காட்டி உற்சாகப்படுத் தும்படி வேண்டுவது. இப்படி செய்யும்போது இவருடைய criticism எனக்கு மிகவும் உபயோகப்பட்டது. இவர் criticism கொடுப்பதில் நிபுணர். இவருடைய வழக்கம் என்னவென்றால் எந்த நடிகரும் எவ்வளவு நன்றாய் நடித்தாலும் 'இதைவிட நீ மிகவும் நன்றாய் நடிக்கக்கூடும்; முயற்சி செய்து நடி’ என்று உற்சாகப் படுத்துவதாகும் என் பாகத்தில் நான் எவ்வளவு நன்றாய் நடித்தாலும் "ஜஷ்டை! சம்பந்தம் நீ இதைவிட நன்றாய் நடிக்கக்கூடும். சோம்பேறியாய் இராதே. இன்னும் முயன்று பார்” என்று சொல்வார்! அவருடைய மனதுகுக் சரியாய் திருப்திகரம் ஆகும்வரையில் நான் மாறி மாறி நடித்துக் காட்டவேண்டும். இதற்கு ஒரு உதாரணம் கொடுக்