பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

வேடத்தை தான் நடிக்க விரும்பினால் நான் என்ன பதில் சொல்கிறேன் என்று கேட்க இச்சைப்பட்டவராய் கேட்டனர் போலும். பிறகு பல ஒத்திகைகளில்தான் நடித்துவந்தார்: அவைகளை என்னை பார்க்கும்படி கேட்கவில்லை. கேட்காதிருக்கும்போது நாமேன் தலை நுழைத்துக் கொள்ளவேண்டுமென்று நானும் சும்மாயிருந்துவிட்டேன். ஒருநாள் இவர் ஒத்திகையை முடித்துவிட்டு திடீரென்று என்னிடம் வந்து "மிஸ்டர் சம்பந்தம் நான் மனோகரனாக நடிப்பது சரியாயில்லை என்று மற்ற நடிகர்கள் கூறுகிறர்கள். ஆகவே அதனின்றும் தான் விலகிக் கொள்கிறேன். நீங்களே அப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு நாடக தினத்தில் நடியுங்கள்" என்று சொல்ல நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டவனாய் "யார் உனக்கு அப்படி சொன்னது? நான் உன்னை மனோகரனாக நன்றாய் நடிக்கும்படி செய்கிறேன் பார் நீ பயப்படாதே" என்று தட்டிக் கொடுத்து அன்று முதல் நாலைந்து ஒத்திகைகளில் இவரை நன்றாய்த் தேற்றுவித்தேன், அப்போது இவர் மிகவும் சந்தோஷப்பட்டார், பல நடிகர்கள் ஆச்சரியப்பட்டனர். "ஆயினும் சம்பந்தம் இவ்வளவு நீங்கள் செய்தது பெரிதல்ல. நாடக தினம் மேடையின்மீது பக்கப் படுதாவில் நின்றுக் கொண்டு என்னை உற்சாகப் படுத்திக் கொண்டு வந்தால் தான் நான் நன்றாய் நடிக்க முடியும்" என்று வற்புறுத்தினார். அதற்கும் நான் இசைந்து அப்படியே செய்தேன் நாடக தினத்தில் அப் பாத்திரத்தை சற்றேறக்குறைய நடித்தார் என்றே நான் சொல்ல வேண்டும். அது முதல் இவர் எனக்கு ஆப்த நண்பராக மாறினார். இது நடந்த சில மாதங்களுக்கெல்லாம் காங்கிரஸ் சபை பண்டுக்காக அல்லது ஏதோ ஒரு தர்ம பண்டிற்காக (எனக்கு நன்றாய் ஞாபகமில்லை) தான் மனோகரா நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடு செய்தார். அது எனக்குத் தெரியாது. அச்சமயம் நான் சென்னையை விட்டு வெளியூர் போயிருந்தேன். நான் திரும்பி வந்துபோது எப்படியிருந்தது என்று நாடகத்தைப்பற்றி என் நண்பர்களை விசாரித்தபோது அவர்கள் ஆரம்பத்தில் நன்றாய் தானிருந்தது, மனோகரன் சங்கிலியறுக்கும் காட்சியில் (இதுதான் நாடகத்தின் ஒரு முக்கியமான காட்சி) ஏதோ தடைப்பட்டு கத்தியும் கையுமாய் நின்று விட்டார் திரைவிடப்பட்டது" என்று கூறினார்கள். அதற்கப்புறம் சத்தியமூர்த்தி அவர்கள் எந்த தமிழ் நாடகத் திலும் நடித்ததாக எனக்கு ஞாபகமில்லை.

எனது நண்பர் சுகுண விலாச சபையைப்பற்றி ஏளனமான பேச ஒருவருக்கும் இடம் கொடுக்கமாட்டார். அந்த சபை