பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

தனக்கு தமிழில் நன்றாக சொற்பொழிவு செய்ய கற்பித்தது என்று பன்முறை கூறியதுண்டு. என்னிடமும் அவ்வாறே கூறியுள்ளார். இவர் நடுவயதிலேயே கால கதியடைந்தது காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு மாத்திரமல்ல, எங்கள் சபைக்கும் பெரிய துரதிர்ஷ்டமாகும்.

ஸ்ரீ T. ஸ்ரீனிவாச ராகவாச்சாரி

இவர் சிறு வயதிலேயே எங்கள் சபையில் சேர்ந்து சில நாடகங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர், இவர் பெரியவரான பிறகு உடல் கொஞ்சம் பெருத்துப் போகவே, பிற்காலத்தில் இவருக்கு நான் ஆண் வேடமே கொடுத்து வந்தேன். இவர் நன்றாய் நடிக்கவும் நடிப்பார், பாடவும் பாடுவார். இவரது பாட்டனார் தியாகராஜ ஸ்வாமிகளுடைய முக்கிய சிஷ்யராக இருந்தவராம். இவர் எங்கள் சபையில் எடுத்துக் கொண்ட முக்கிய பாத்திரங்கள் நந்தனாரில் நந்தன், காலவரிஷியில் சித்திர சேனன், வாணீபுர வணிகனில், ஷாம்லால் முதலியவைகளாம். இவைகளிலெல்லாம் இவர் முக்கிய கியாதி பெற்றது நந்தனார் வேடத்தில் தான் அதிலுள்ள பாட்டுகளை பெல்லாம் மிகவும் உருக்கமாக பாடி சபையோரை எப்போதும் சந்தோஷிக்கச் செய்வார். இவர் கடைசி காலத்தில் தன் வீட்டில் பூஜை அறையில் ஸ்தோத்திரங்கள் பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென மரணமடைந்தார். இவரது அகால மரணம் எங்கள் சபையோரையெல்லாம் மிகவும் வருந்தச் செய்தது.

வி. வெங்கடாசலையா

இவர் ஒரு தெலுங்கு பிராமணர். ஆயினும் தமிழில் எழுதவும் படிக்கவும் நன்றாய் கற்றவர். மேற்சொன்ன ஓரியண்டல் டிராமடிக் சொசைட்டியில் முதலில் பல வருடங்கள் நடித்தவர். இவர் சில்லரை பாத்திரங்கள் ஆடுவதில் சமர்த்தர் என்று பெயர் பெற்றார். ஆயினும் தோட்டி முதல் தொண்டமான் வரையில் ஆடுவதில் நிபுணர். ஆயினும் நாடக வேஷம் தரிப்பதிலும் மற்றவர்களுக்குப் போடுவதிலும் இவருக்கு இணையில்லை என்றே நான் கூறவேண்டும். ஓ, டி. சொசைட்டி கலைந்த பிறகு சுகுண விலாச சபையைச் சேர்ந்தார், சேர்ந்து ஆயுள் பர்யந்தம் எங்களுக்கெல்லாம் வேஷம் போடுவதில் சந்தோஷமாய் கழித்தார் என்றே நான் சொல்ல வேண்டும். இவர் உயிருடன் இருந்த வரையில் இவரே எனக்கு வேஷம் போடவேண்டுமென்று பிடிவாதம் பிடிப்பேன், இவர் எங்கள் சபைக்காக நந்தனார் சரித்திரத்தை தெலுங்கில்