பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

பிறகு எங்கள் சபையை சேர்ந்தார். இவர் நடிக்கும் திறத்திற்கு தக்கபடி சில பாத்திரங்களை இவருக்கு கொடுத்து வந்தேன். அவைகளில் முக்கியமானவை அமலாதித்யன் நாடகத்தில் லீலா தரனும், விரும்பிய விதமே நாடகத்தில் ஜகந்நாதனுமாம். இவரது முக்கியமான குணம் ஒன்று என்னவென்றால் தான் நடிக்கும் பாகத்தில் நான் சொல்லிக் கொடுத்த நடிப்பு தனக்கு சரியாக வராவிட்டால் “வாத்தியார், வாத்தியார்! இன்னொரு தரம் சொல்லுங்கள், இன்னொருதரம் சொல்லுங்கள்" என்று வற்புறுத்துவார், நான் சொல்லிக் கொடுத்தது சரியாக வரும் வரையில் என்னை விடமாட்டார். இவர் சுமார் 15 வருடங்களுக்கு முன்பாக பூரண சன்யாசம் வாங்கிக் கொண்டு அந்த ஆஸ்ரமத்தின் முறைப்படி இன்றும் ஈஸ்வரன் கிருபையால் வாழ்ந்து வருகிறார். இவரது வயது தற்காலம் 89 ஆகும்.

ஸ்ரீ. E. கிருஷ்ணய்யர் அவர்கள்

இவர் திருநெல்வேலியில் ஒரு சிற்றூரில் பிறந்தவர். அங்கு ஆரம்பக் கல்விகளையெல்லாம் கற்று பிறகு சென்னைக்கு வந்து பி.ஏ.பி.எல், பட்டத்தைப் பெற்று ஹைகோர்ட் வக்கீலானார், அச்சமயத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்து அதன் கோட்பாடுகளைப் பற்றியவராய் அரசியலாரை எதிர்த்ததற்காக இரண்டு முறை சிறைவாசப் பெருமைப் பெற்றார். அச்சமயத்தில் ஒருமுறை ஒரு குற்றத்திற்காக முக்கிய மாகாண மாஜிஸ்டிரேட்டு முன்பாகக் கொண்டு போய் நிறுத்தப்பட்ட போது 'உனக்கு என்ன வேலை' என்று அவர் கேட்டதற்கு "என் மனதின் இச்சைப்படி கலைஞன் வேலை, ஆயினும் கட்டாயப்படி ஹைகோர்ட் வக்கீலாயிருக்கிறேன்” என்று பதில் உரைத்தாராம். அதன் படியே சில வருடங்கள் வக்கீலாக வேலை பார்த்த போதிலும் அவர் மனமானது நாடக நாட்டிய கலை மீதே சென்றது என்று கூறவேண்டும். இளவயதிலேயே இவருக்கு சங்கீதத்தில் பிரியமிருந்ததாம். ஆகவே சென்னையில் சுகுண விலாச சபையில் 1923-இல் அங்கத்தினரானார். அதில் ஒன்றிரண்டு சில்லரை வேடங்களை முதலில் தரித்த பிறகு மாள விகாக்னி மித்ரத்தில் இவருக்கு மாளவிகை என்னும் அயன் ஸ்திரீ பார்ட் கொடுக்கப்பட்டது. அதற்காக கின்சின் நாட்டியம் முதலிய சிறு கலைகளை கற்று அதில் நடித்தார். அதைக் கண்ட பலர் அதை மெச்சிப் பேசினார்கள், அதன் மூலமாக நாட்டியக் கலையை நன்றாய் கற்கவேண்டு மென்று