பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

ஸ்ரீ. கே. நாகரத்தினம் ஐயர்

எனது ஆருயிர் நண்பர் C. ரங்கவடிவேலு காலகதி யடைந்த பிறகு இவரை என்னுடன் முக்கிய பாகங்கள் நடிப்பதற்காக தேர்ந்தெடுத்தேன். இவர் சங்கீதம் மிகவும் நன்றாயிருந்தது. முகக்களையும் நன்றாயிருந்தது. இதில் ஒரு வேடிக்கை யென்ன வென்றால் அது வரையில் ஆண் வேடம் தரிப்பதற்கே விரும்பினவர் நான் இவரிடம் "உனக்கு ஆண் வேடம் சரியாயில்லையப்பா ஸ்திரீ வேடம் தான் சரியாயிருக்கும்" என்று அவர் எண்ணத்தை மாற்றினேன். இவர் என்னுடன் 1923-வது வருட முதல் அவர் கால பரியந்தம் நடித்து வந்தார். ஏறக்குறைய ரங்க வடிவேலு எடுத்துக் கொண்ட முக்கிய பாத்திரங்களை யெல்லாம் நடித்தார். ஆயினும் வள்ளி வேடத்திலும், அபலா வேடத்திலும், (அமலாதித்யனில்) ரங்க வடிவேலுவைப் பார்க்கிலும் கொஞ்சம் நன்றாகவே நடித்தார் என்று நான் சொல்ல வேண்டும். இவர் கடைசி காலத்தில் மதுரையில் உத்தியோகத்தில் மாறியபோது நான் அங்கு சென்று நான்கைந்து முறை மதுரை நாடக சபையில் இவருடன் நடித்துள்ளேன்.

B. ராமமூர்த்தி

இவர் ஆதியில் ஓரியண்டல் டிராமடிக் சொசைட்டியில் பல நாடகங்களில் ஸ்திரீ வேஷதாரியாக நடித்தவர், ஒருமுறை அந்த சொசைட்டியார் சந்திரஹாசன் என்னும் நாடகத்தை நடத்திய போது இவர் விஷயை வேடம் தரித்ததைப் பார்த்திருக்கிறேன். அப்போதே இவருக்கு உடல் ஸ்தூலமாயிருந்தது. பிறகு அந்த சொசைடி பிரிந்தபின் சுகுண விலாச சபையைச் சேர்ந்தார். எங்கள் சபையில் தெலுங்கு பாஷையில் பல முக்கிய நாடகங்களில் கதா நாயகனாக நடித்து வந்தார். அன்றியும் இவரே வரூதினி என்னும் தெலுங்கு நாடகத்தை எழுதி அதில் கதா நாயகனாக நடித்தார். தமிழிலும் இரண்டொரு முறை எங்கள் சபையில் நடித்திருக்கிறார். நாங்கள் மூன்றாம் முறை கொழும்புக்குப் போய் ஆடின பிறகு இவருக்கு கண்வரிஷி வேடம் கொடுத்திருந்தேன். அதில் இவர் நடித்த போது இவருக்கு நேரிட்ட ஒரு கஷ்டத்தை எழுத வேண்டிய வனாயிருக்கிறேன், புருஷ வேஷம் தரித்து நடித்த போதிலும் இவருக்கு அடிக்கடி ஸ்திரீகளுக்குரிய அங்க விண்யாசம் தானாக வந்து விடும். அன்றியும் ஆண்வேடத்தில் நடிக்கும் போது ஒருவிதமாக நடப்பார். பாட்டு பாடும் போது