பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தெலுங்கு நாடகங்களை எழுதி அச்சிட்டுள்ளார். அவைகளில் முக்கியமானவை சாவித்திரி சத்தியவான், சாரங்கதரா, சிரகாரி, பாதுகா பட்டாபிஷேகம், பிரஹல்லாதா, பாஞ்சாலி சுயம்வரம், பிரமேளா முதலியனவாம். இந்நூல்களையெல்லாம் தெலுங்கு பண்டிதர்கள் மிகவும் பாராட்டியிருக்கின்றனர். ஏறக்குறைய எல்லா நாடகங்களிலும் தானே முக்கிய பாத்திரமாக நடித்துள்ளார். அந் நாடகங்களுக்கு பாட்டுக்கள், பத்யங்கள், தண்டகங்கள் முதலியவைகளை தானே எழுதியுள்ளார். அன்றியும் நாடகப் பாத்திரங்களை தக்கபடி நடிக்கும்படி, தானே கற்பிப்பார்.

இவரை நான் முதல் முதல் சந்தித்தது ஒரு வேடிக்கையான சந்தர்ப்பமாகும், சென்னையில் நாங்கள் ஆச்சாரப்பன் வீதி 54-வது நெம்பர் வீட்டில் வசித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் என் தகப்பருடைய சிநேகிதர் வேதாந்த முதலியார் என்பவர் ஒரு கிழவனாருடன் எங்கள் வீட்டிற்கு வந்தார். அந்த கிழவனாருக்கு அப்போது ஐம்பது வயதிற்கு மேலிருக்கும். முகம் திரைத்து நரைத்திருந்தது. கன்னங்கள் குவிந்திருந்தன, கிழவர் சரிகை அங்கவஸ்திரங்களையும் சொக்காயையும் அணிந்திருந்தார். நரைத்த மயிரையுடைய தலைக்கு ஒரு விலையுயர்ந்த வெள்ளி சரிகை குல்லாயை அணிந்திருந்தார். வேதாந்த முதலியார் கேட்ட கேள்விக்கு தகப்பனார் மேல் மாடியிலிருக்கிறார் போங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டு இதென்ன வேஷக்காரன் போலிருக்கிறாரே! என்று கொஞ்சம் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். கொஞ்ச நேரத்திற் கெல்லாம் என்னையும் என் தமையனாராகிய ஆறுமுக முதலியாரையும் மேல் மாடிக்கு அழைத்து “இவர் இன்று விக்டோரியா பப்ளிக் ஹாலில் தெலுங்கு நாடகம் ஒன்று நடத்த போகிறாராம் வருகிறீர்களா. என்னுடன்" என்று என் தகப்பனார் கேட்க, நாங்கள் இருவரும் குதூகலத்துடன் ஒப்புக் கொண்டோம். அன்றிரவு ஜனங்கள் நிறைந்திருந்த விக்டோரியா பப்ளிக் ஹாலில் ஒரு புறம் கண்கொட்டாது நடந்த நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன் நாடகம் மிகவும் நன்றாயிருந்தது. என் மனதில் ஒரு பெரும் கிளர்ச்சியையுண்டு பண்ணியது. இனி இதைப்பற்றிய மற்ற விஷயங்களை அறிய விரும்புவோர் தயவு செய்து எனது நாடக மேடை நினைவுகள் என்னும் நூலின் முதல் பாகத்தில் நான் விவரமாய் எழுதியிருப்பதைப் படித்துக் கொள்வார்களாக.

அன்றிரவே பல்லாரி சபையைப் போல் ஓர் நாடக சடையை தமிழில் ஏற்படுத்தி அதில் நான் நடிக்க வேண்டு