பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

மென்று பேரவாக் கொண்டேன். இது தான் எங்கள் சுகுண விலாச சபை ஏற்படுத்தப் பட்டதற்கு முக்கிய காரணம்.

இதன் பிறகு இரண்டு மூன்று வருடங்களுக்கொரு முறை கிருஷ்ணமாச்சார்லு அவர்கள் தான் ஏற்படுத்திய சபையை சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்து அநேக நாடகங்களை நடத்தியுள்ளார்.

இவர் வயோதிகராயிருந்தபோதிலும் குரல் மாத்திரம் கொஞ்சமும் தளர்ச்சியடையவில்லை. வசனங்களை மிகவும் கம்பீரமாய் பேசுவார். பாட்டுக்களை ஒரு கஷ்டமும் இல்லாதது போல் மிகவும் தெளிவாக சுலபமாகப் பாடுவார். அது முதல் நான் அவருக்குத் தெரிந்தவனாகி அவர் சென்னைக்கு வந்த போதெல்லாம் அவருடன் நாடக சம்பந்தமான அநேக விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறேன். அவர் சாரங்கதரா நாடகத்தைத் தெலுங்கில் எழுதியது போல் நானும் அக் கதையை தமிழில் எழுதி நடித்திருக்கிறேன் என்பதை அறிந்தவராய் நான் நடித்தபோது ஒருமுறை அதை பார்க்க வந்தார், "கதையை சம்பந்த முதலியார் கொஞ்சம் மாற்றியிருக்கிறார், அதை நான் ஒப்பவில்லை. ஆயினும் அவர் தான் மாற்றியபடி நடித்தது நன்றாயிருந்தது. சில பாகங்கள் முக்கியமாக புறா விடும் காட்சி நான் எழுதியதைவிட மிகவும் நன்றாயிருந்தது" என்று மறு நாள் எங்கள் இருவருக்கும் தெரிந்த ஒரு கோமுட்டி செட்டியாரிடம் கூறியதை அவர் எனக்குத் தெரிவித்தார்.

பிறகு நாங்களிருவரும் அன்யோன்ய சிநேகிதர்களான பிறகு ஒருமுறை என்னிடம் அவர் கூறியதை இங்கு எழுதுகிறேன், “மிஸ்டர் சம்பந்தம், நீங்கள் வக்கீலாக பேரெடுக்க வேண்டுமென்றிருந்தால் நாடகமாடுவதை விட்டு விட வேண்டும்" என்றார். ஆயினும் அவர் எனக்குக் கூறிய புத்தி மதியை என் மனதில் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏதோ வக்கீலாகவும் ஜட்ஜாகவும் பெயர் பெற்றேன். நாடகமாடுவதிலும் கொஞ்சம் பெயர் பெற்றேன் என்றே கூறவேண்டும்.

ஸ்ரீ T. ராகவாச்சார்லு

இவரை நான் முதல் முதல் பார்த்தது ஒரு விபரீதமான சம்பவம். பல்லாரி சுமனோகர சபா என்னும் நாடக சபா விக்டோரியா பப்ளிக் ஹாலில் (Fall of Vijayanagar) விஜய நகர் சாம்ராஜ்ய வீழ்ச்சி என்னும் நாடகத்தை நடத்தப்