பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

மான நடிப்பை நானும் சபையில் வந்த எல்லோரும் ஆச்சரியப் படும்படியாக நடித்தார். அது கீழ் வருமாறு நான் வேடம்பூண்ட ரஜபுத்ரவீரன் மகமத்திய சைனியங்களால் கொல்லப்பட்டபோது இந்த சுத்த வீரனை மிக்க கௌரவமாக தகனம் செய்யவேண்டு மென்று கூறி ஈட்டிகளாலும் கத்திகளாலும் ஒரு பாடையைக் கட்டச் சொல்லி அதில் என்னை வளர்த்தி மகம்மதிய வீரர்களை கொண்டே எடுக்கச் செய்தார். அச் சமயம் என்னை தூக்கிய போது தான் மேலே அணிந்திருந்த மிகுந்த விலை யுயர்ந்த சரிகை சால்வை யொன்றை என் உடல்மீது தன் கையால் போர்த்திவிட்டு என் சவத்திற்கு பின்பாக தலை குனிந்த வண்ணம் நடந்து வந்தார். இது அவ்வளவும் அவர் நூதனமாக செய்த நடிப்பாகும். அவர் கரமானது சால்வையை போர்த்தியபோது என் உடலின் மேல்பட உடல் முழுவதும் புளகாங்கிதமானேன்! "காலத்தினாற் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தினும் மாணப் பெரிது" என்ற தெய்வப் புலமை திருவள்ளுவர் வாக்கின்படி இவர் எனக்கு செய்த உதவிக்கும் மரியாதைக்கும் நான் என்ன கைம்மாறு செய்யக் கூடும்? நண்பன் என்றால் அப்படி இருக்க வேண்டும்! நடிகன் என்றால் இப்படி இருக்க வேண்டும்! இன்னும் ஒரு சிறு கதையைக் கூறி இவரைப் பற்றி நான் எழுதியதை முடிக்கிறேன், ஒரு முறை பல வருடங்களுக்கு முன்பாக ரேடியோவில் ஏதோ பேசப் போயிருந்தபோது என் பேச்சு வருவதற்கு கொஞ்சம் கால தாமதமாக நான் பக்கத் தறையில் உட்கார்ந்திருந்தேன். அச்சமயம் ரேடியோ உத்தியோகஸ்தர் "மிஸ்டர் சம்பந்தம், கொஞ்சம் பொறுங்கள், சீக்கிரம் உங்களை உள்ளே அழைத்துக் கொண்டு போகிறேன்" என்று சொல்லி விட்டுப் போனார். இதைக் கேட்டதும் என் எதிரில் உட்கார்ந்திருந்த ஒரு சீமான் "நீங்களா சம்பந்தம்?" என்று என்னை கேட்க நான் 'ஆம்' என்று சொல்லி எதற்காக கேட்கின்றீர் என்று நான் வினவியபோது "நான் ஆந்திர தேசத்தார், பல்லாரியில் ராகவாச்சார்லு அவர்கள் உங்களைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். அதுமுதல் உங்களை பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்தேன். இன்று என் எண்ணம் நிறைவேறிற்று." என்று ஆங்கிலத்தில் சொன்னார். அவர் என்ன சொன்னார் என்று நான் கேட்டபோது பின்வருமாறு கூறினார். இதை நான் இங்கு டம்பமாக எழுதவில்லை. ராகவாச்சார்லு அவர்கள் என்னைப் பற்றி கூறிய புகழுக்கு நான் அருகனோ இல்லையோ நான் சொல்வதற்கில்லை. அவர் வார்த்தைகளை இங்கு எழுதியதற்கு முக்கிய காரணம் காலஞ் சென்ற ராகவாச்சார்லு அவர்கள் என்