பக்கம்:நான் கண்ட நாடகக் கலைஞர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

படத்தை தயாரித்தவர் என்னை அதில் சில சீர்திருத்தங்கள் செய்ய கேட்டதுபோல் பாபநாசம் சிவன் அவர்களை பல புதிய பாட்டுகள் எழுதும்படி வரவழைத்தார். அங்கு நான் தங்கியிருந்தபோது இவருடன் பேசிக்கொண்டிருக்கையில் "நான் உங்களுடைய சில நாடகங்களில் பல வருடங்களுக்குமுன் நடித்திருக்கிறேன், முக்கியமாக மார்க்கண்டேயர் நாடகத்தில் நான் மார்க்கண்டேயனாக நடித்ததை பலர் புகழ்ந்திருக்கின்றனர்" என்றார். இவரை நான் கோயமுத்தூரில் பார்த்த சமயத்திலேயே இவர் வயோதிகராகத் தோற்றப்பட்டார். ஆயினும் தான் கட்டிய பாட்டுக்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் தளரா ஊக்கமுடையவராய் இருந்தார் என்பதை நான் அறிவேன், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் "ஒரே ராகத்தில் ஒரு நாடகத்திற்கு பல ரசங்களுக்கேற்றபடி நான் கட்டிக் கொடுக்கமுடியும். அதன் சூட்சுமம் என்னவென்றால் மெட்டுக்களை பாவத்திற்கு தக்கபடி மாற்றவேண்டும்” என்றார். எனக்குத் தெரிந்தபடி இவர் சென்ற நாற்பது ஐம்பது வருடங்களாக அநேக தமிழ் நாடகங்களுக்கும் தமிழ் பேசும் படங்களுக்கும் மிகவும் இனிய பாட்டுகளை எழுதிக் கொடுத்திருக்கிறார் என்பது தமிழ் நாடக அபிமானிகள் அனைவரும் அறிந்த விஷயமே. இத்திறமைக்காக சென்ற வருடம் சங்கீத நாடக சங்கத்தார் இவருக்குப் பரிசு அளித்தது, இதை படிக்கும் நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம். ஈசன் கருணையால் இன்னும் பல்லாண்டு அதன் தொண்டினை செய்து நாடகத்தின் இசைப் பகுதியை மேம்படுத்துவாராக!

திரு. N. S. கிருஷ்ணன்

இவர் சிறு வயதிலேயே நாடகக் கம்பெனிகளில் நடிக்கும் நடிகர்களைப்போல் நடித்து அவர்களை ஏளனம் செய்து வந்தார். இந்த வழக்கம் முற்றி பெரியவனான பிறகு நல்ல ஹாஸ்ய நடிகரானார். அதன்பேரில் இவரும் இவருடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்த ஸ்ரீமதி மதுரம் அம்மாளும் ஹாஸ்ய பாகங்களுக்காகவே அநேகம் பேசும் படங்களில் அழைக்கப் பட்டு வந்தனர். இவருக்கு மரியாதை செய்ய ஒரு பெரும் கூட்டம் கூடினபோது ஒருவர் இவர் அதுவரையில் 102 பேசும் படங்களில் நடித்ததாக கூறியது ஞாபகமிருக்கிறது. சாதாரணமாக ஏதாவது ஒரு பேசும் படம் நன்றாயிராவிட்டால் இவரையும் ஸ்ரீமதி மதுரத்தையும் அதில் ஹாஸ்ய பாகத்தில் நடிக்கும்படி செய்தால் சரியாக போய்விடும் என்று சிலர்