49
வேடிக்கையாய் சொல்வார்கள், இவரும் ஏதாவது பேசும் படம் சுவஸ்தமாயில்லாவிட்டால் எங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்தால் சுவஸ்தப்படுத்திவிடுவோம் என்று வேடிக்கையாய் சொல்வார். இவர் விதி வசத்தால் அந்திய காலத்தில் பெரும் கஷ்டம் அநுபவிக்க நேரிட்ட போதிலும் நடிப்பதை மாத்திரம் விடவில்லை. கடைசியில் பாகவதரைப் போல் வேஷம் பூண்டு “கிந்தனார்" என்னும் ஹாஸ்யக் கதையை நடத்தி சபை யோரை நகைக்கச் செய்தார். இவரும் தியாகராஜ பாகவதரைப்போல் நடுவயதிலேயே காலமானார்.
இவர் சிறு வயதில் நாடகக் கம்பெனிகளில் சேர்ந்திருந்ததாக எனக்குத் தெரியாது. இவர் பெரிய பாடகராகி பெயர் பெற்ற பிறகுதான் பேசும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சங்கீதத்தில் மிகவும் புகழ்பெற்றவர். நல்ல கம்பீரமான குரலுடையவர். இவருடைய சங்கீதத்திற்காகவே பல படங்களில் முக்கிய பாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. ஆயினும் கொஞ்சம் குறைந்த வயதுடையவரா யிருந்தபடியால் திரோத்தாத பாத்திரங்களில் இவர் நடிப்பது அசாத்தியமாயிருந்தது. இவர் பாட்டுக்களை கேட்பதற்கே இவர் நடிக்கும் படங்களில் ஜனங்கள் குழுமி இருந்தனர். இவர் தன் கடைசி காலத்தில் துரதிர்ஷ்ட வசத்தால் பெரும் கஷ்டத்திற்குள்ளாயினார். அதன் பேரில் தெற்கே ஓர் சிவாலயத்திற்கு சென்று பணி செய்து வந்து காலத்தைக் கடத்தி அவ்விடமே காலமானார்.
இவர் நாடக மேடையில் நடித்ததைப்பற்றி நான் எழுதுவதற்கு ஒன்றுமில்லை, பேசும் படங்களில் பன்முறை நடிக்திருக்கிறார். முக்கியமாக வில்லன் (Villain) பாகங்களில் இவர் நடிப்பது வழக்கம். வில்லன் என்றால் நற்குணமுடைய முக்கிய பாத்திரத்திற்கு கெடுதி செய்யும் பாத்திரம் என்று பொருள். இப்படி நடிப்பது சுலபமல்ல, இவைகளில் இவர் நன்றாய் நடித்ததற்காக சென்னை சங்கீத நாடகசபையாரால் வெகுமானம் பெற்றிருக்கிறார்.