பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மூதறிஞர் இராஜாஜி ♦ 95



நான் பேசி முடித்தவுடன் “இன்னும் கொஞ்சம் பேசலாமே” என்றார் இராஜாஜி, “ஐயா! அழைப்பிதழில் ஆளுக்கு இருபது நிமிஷம் என்று போட்டிருக்கிறது. ஆதலால் நான் முடித்து விட்டேன்” என்றேன். அவர் தமக்கேயுரிய முறையில் கூட்டத்தாரைப் பார்த்து “தலைவரென்ற முறையில் இவருக்கு இன்னொரு இருபது நிமிஷம் தரலாமென்று நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று அவர் சொன்னவுடன் எல்லோரும் கை தட்டினார்கள். “பார்த்தீங்களா! நான் சொல்றதை எல்லாரும் ஏத்துக்கிட்டாங்க. பேசுங்க” என்றார். மறுபடியும் விட்ட இடத்தில் தொடங்கி, முழுப்பேச்சிலும் அறிவு, உணர்வுப் போராட்டத்தையே வளர்த்திக் காட்டி, ஆன்ம முன்னேற்றம் அடையவேண்டுமானால் அறிவு துணை செய்யாது, உணர்வுதான் தேவை” என்று சொல்லி முடித்தேன்.

உட்கார்ந்தவுடன் இராஜாஜி என்னைக் கேட்ட கேள்வி திடுக்கிடச் செய்தது. ஆங்கிலத்தில்தான் என்னோடு பேசினார். “உங்களுடைய பெயரின் முன்னர் இருக்கும் எழுத்துக்கள் என்ன?” என்று கேட்டார். அவர் என்னை முறைத்ததற்கும் என்னை விநோதமான முறையில் அறிமுகம் செய்ததற்கும் உள்ள காரணத்தை இந்தக் கேள்வியை அவர் கேட்டவுடன் ஒரே விநாடியில் புரிந்துகொண்டேன். ஆங்கிலத்தில் “ஐயா என்னுடைய முதலெழுத்துக்கள் T.L. அல்ல அ.ச. என்பதாகும்” என்று கூறி முடித்தேன். என்னுடைய சாதுரியத்தைப் புரிந்துகொண்ட அவர், “தஞ்சாவூர் ஜில்லாவோ” என்றார். “இல்லை ஐயா, அரசங்குடி என்பது திருச்சியடுத்த கல்லணையின் பக்கத்தில் உள்ளது” “என்றேன். இந்த முழு உரையாடலும் ஒன்றரை நிமிடத்தில் முடிந்துவிட்டது. பிறகு அவர் முடிவுரை சொல்ல ஆரம்பித்தார். என்னுடைய பேச்சை அடித்தளமாகக் கொண்டு, அவருக்கே உரிய முறையில்,