பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


17. மர்ரே எஸ். ராஜம்


பழைய சாமான்களை ஏலம் விடும் மிகப் பெரிய நிறுவனம், மர்ரே அண்டு கம்பெனி ஆகும். அரசாங்கத்தார் ஏலம் விடும் எதனையும் மர்ரே கம்பெனியார் மூலமாகவே விடுவர். அப்படிப்பட்ட மர்ரே கம்பெனி உரிமையாளர் எஸ்.ராஜம் ஆவார். 1945-வாக்கில் பெருஞ்செல்வராகிய திரு. ராஜத்திற்கு ஒரு புதிய சிந்தனை தோன்றிற்று. பிறப்பால் வைணவப் பிராமன குலத்தில் தோன்றினும் பிரபந்தங்களிலோ தமிழ் இலக்கியங்களிலோ அவருக்குப் பயிற்சி ஏதுமில்லை. அக்கால கட்டத்தில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்பது பரிதாபமான காகிதங்களில் பரிதாபமாக அச்சிடப்பெற்று ஒரு சில இடங்களில் மட்டும் பரவியிருந்தது. ராஜம் பல பிரதிகளை ஒப்பு நோக்கி அடக்க விலைப் பதிப்பாக வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தார். பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ, சா.கணேசன், நான் ஆகிய மூவரும் இப்பெரும் பணிக்குப் பதிப்பாசிரியர் குழு என்ற பெயரில் இடம் பெற்றிருந்தோம். நீண்ட காலம் திரு.வையாபுரிப் பிள்ளை அவர்களிடம் இருந்து ஏடு பார்ப்பதிலும் பிரதிகளை ஒப்பு நோக்குதலிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த திரு.மு.சண்முகம் பிள்ளை பதிப்புப் பணியை முழுநேரப் பணியாக ஏற்றார். 1955-இல் திருவாய்மொழி முதலாயிரம் டெம்மி அளவில் ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் அடக்க விலைப் பதிப்பாக வெளிவந்தது. இந்தப் பதிப்பு வெளிவந்தவுடன் அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி கோயிலில் இதனை வெளியிட முடிவு செய்தார் ராஜம். சி.பி.இராமசுவாமி ஐயர் அவர்களைக் கொண்டு இதனை வெளியிடுவது என்று முடிவு செய்தார். அவரைச் சென்று