பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ♦ 103


இடையில் ஒரு காகிதத்தில் எழுதி, கி.வா.ஜவிடம் நீட்டினார். அதைப் பார்த்த கி.வா.ஜ. ‘ஹிஹி’ என்று சிரித்துக்கொண்டு, ‘அதிகமான புத்தகங்கள் வந்திருக்கின்றன அதனால்தான் விமர்சனம் வரவில்லை’ என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சட்டென்று கி.வா.ஜ.வின் கையிலிருந்த அந்தத் துண்டுக் கடிதத்தை வாங்கிப் பார்த்தேன். அதில் பின்வருமாறு எழுதியிருந்தது: “விமர்சனத்திற்காகக் கலைமகளுக்கு ஐந்து நூல்கள் அனுப்பியிருந்தேன். ஏழு மாதங்களுக்குமேல் ஆகியும் ஒரு நூலுக்குக்கூட விமர்சனம் வரவில்லை. அது கலைமகளா அல்லது விலைமகளா?” அந்தக் கடைசி வரியைப் படித்த நான் திடுக்கிட்டேன். அதை எழுதியவர் ஒரு துறவி; மெளன விரதம் வேறு. தாமே கைப்பட இப்படி எழுதித் தந்தார் என்றால் அந்தத் துறவியின்மேல் எனக்கிருந்த மரியாதையெல்லாம் போய்விட்டது.

மெள்ள நான் வாலை அவிழ்த்துவிட எண்ணினேன். அதற்குள் நான் யார் என்பதைக் கி.வா.ஜ. அவருக்குத் தெரிவித்தார். ஆனால் பெரியவர் கண்டு கொள்ளவேயில்லை.

இந்த நிலையில் நான் ‘சுவாமி, குறிப்பிட்ட இந்த ஊர்க்காரர்கள் உங்கள் நூல்களையெல்லாம் முன்னர் வெளியிட்டார்களே? இப்போது ஏன் வெளியிடவில்லை’ என்ற வினாவை நான் எழுப்பியதுதான் தாமதம்; சுவாமிகளின் சினம் உச்சநிலைக்குச் சென்றுவிட்டது. ஒரு கடிதத்தில் ‘அந்தப் பெத்த தாயோழிகள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்’ என்று எழுதித் தந்தார். ஒரு துறவி இவ்வாறு எழுதித் தந்தவுடன் அங்கு நிற்கப் பிடிக்காமல் நான் புறப்பட்டுவிட்டேன். கி.வா.ஜ.வும் என் பின் தொடர்ந்தார். சற்று நேரம் சென்ற பிறகு சுவாமிகள் கைதட்டிக் கி.வா.ஜ.வை அழைத்தார். அவர் போனவுடன் என் கையில் உள்ள துண்டுக் கடிதத்தை வாங்கித் தருமாறு