பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


19. தமிழ்த் தென்றல் திரு.வி.க.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழகத்தின் நிலை ஒரு விதமாக இருந்தது. மூன்று பெரும் பிரிவுகள் ஒன்றிற்கொன்று தொடர்பில்லாமல் தமிழகத்தில் இயங்கி வந்தன. முதலாவது பிரிவு- சமயவாதிகள் கூட்டம். இப்பிரிவில் சைவர், வைணவர் ஆகிய இரு பிரிவினரும் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றியதுடன் பல சமயங்களில் கைகலப்பிலும் ஈடுபட்டனர். இந்த இரண்டு சமயவாதிகள் கூட்டத்திலும் கற்றறிருந்த பெரியவர்கள் நிரம்ப இருந்தாரேயினும் அவர்கள் அனைவரும் தங்கள் எல்லையை விட்டு வெளியே செல்லவில்லை. தங்கள் சமயஞ் சார்ந்த இலக்கியங்களைத் தவிர, ஏனைச் சமய இலக்கியங்களையோ தமிழ் இலக்கியங்களையோ இவர்கள் கண்னெடுத்துப் பார்த்ததில்லை. இந்தப் போராட்ட நிலைக்கு இரண்டு உதாரணங்கள் கூறலாம். சைவ சமய இலக்கியங்களில் தோய்ந்து நின்றதுடன் வடமொழி ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் வல்லுநராக இருந்த மறைமலை அடிகளார்கூட ஆழ்வார்களைப் பற்றியோ, அவர்கள் இயற்றிய திவ்யப் பிரபந்தப் பாடல்கள் பற்றியோ அறிந்ததும் இல்லை; அறிய முற்பட்டதும் இல்லை; மறைமலை அடிகளின் ஆசிரியர் சூளை சோமசுந்தர நாயக்கரும் இதே நிலையில்தான் இருந்தார். பெருந்தலைவர்களே இப்படி என்றால், தொண்டர்களைப் பற்றிப் பேசத் தேவையில்லை. வைணவர்கள் நிலையும் இதற்குச் சற்றும் குறைந்ததன்று. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரும் தேவாரம், என்ற சொல் காதில் விழுவதைக்கூட விரும்பவில்லை. பன்னிரு திருமுறைகளையும்