பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்த் தென்றல் திரு.வி.க. ♦ 113


சைவப்பெருமக்களுக்கு இக்கட்டான நிலை. ஓகோ என்று வளர்ந்துவிட்ட திரு.வி.கவை விடவும் முடியவில்லை. நாயன்மார்கள் தவிரப் பிற சமயவாதிகளின் பெயர்களைச் சொல்வதுகூட மன்னிக்க முடியாத குற்றம் என்று கருதிய அக்கால நிலையில் திரு.வி.க.வின் பேச்சு இவை அனைத்தையும் ஒன்றாக்கி, சமரச சன்மார்க்கம் என்ற பெயரில் வழங்கிற்று. இவை அனைத்தும் போதாவென்று திரு. வி.க.வும் தோழர் வாடியாவும் தொழிலாளர் சங்கத்தை நிறுவினர். சென்னை பி.அண்ட்சி ஆலையில் ஒரு மிகப் பெரிய வேலைநிறுத்தத்தை உருவாக்கி, அன்று ஆட்சியிலிருந்த நீதிக்கட்சிக்குப் பெரும் தலைவலியை உண்டாக்கியவர் திரு.வி.க.

1932-ல் திருவதிகை வீரட்டானத்தில் சைவசித்தாந்த மகாசமாஜத்தின் ஆண்டு விழா மூன்று நாளும் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் முன்னிலையில் தினம் ஒருவர் தலைமை ஏற்றனர். இரண்டாம் நாள் மாலை நிகழ்ச்சிக்குத் திரு.வி.க தலைவர். பன்மொழிப் புலவர் பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ.க்கும் எனக்கும் பேசும் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. காலையிலேயே பிரச்சினை தொடங்கிவிட்டது. அதற்கு முன்னர், தூத்துக்குடி சைவ சித்தாந்த சபையில் மெய்ப்பொருள் நாயனாரையும் ஏசுநாதரையும் ஒப்பிட்டுப் பேசிவிட்டேன் நான். அக்கூட்டத்திற்கு வந்திருந்து நான் பேசியதைப் பொறாத சைவப் பெருமக்கள் சிலர் சமாஜத்தின் காரியதரிசியாக இருந்த ம.பா. அவர்களை அணுகி என்னைப் பேசவைப்பது சைவத்துக்கே ஒடு பெரிய இழுக்கு என்று பற்றவைத்துவிட்டனர்.

திரு. ம.பா. என்னை அழைத்து ‘நீ அவ்வாறு பேசியது சரியன்று. சைவத்தின்மேல் சமயம் வேறில்லை என்பது உனக்குத் தெரியாதா? இன்று நீ பேசும்பொழுது