பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்த் தென்றல் திரு.வி.க ♦ 119


அவரது பெரிய பங்களாவை அடைந்தேன். மெள்ள அந்தப் பங்களாவினுள் நுழைந்தேன். படகுபோன்ற ‘பியூக்’ கார் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது. ஐயங்கார் அவர்கள் பின் கதவைத் திறந்து ஒரு காலையும் உள்ளே வைத்துவிட்டார்; அந்த நேரத்தில் என்னைப் பார்த்து விட்டார். வழக்கமான அவருடைய ஆவேசக்குரலில் ‘யார் நீ’ என்று ஒரு ஐந்து ஆறுமுறை விடாமல் தொடர்ந்து கேட்டுவிட்டார். வேறு வழியில்லாமல் நடந்தவற்றைக் கூறினேன். “அந்தக் கம்மனாட்டி கார் கேட்டானா? உள்ளே வா” என்றார். உள்ளே சென்றதும் என்னை யார் என்று விசாரித்ததுடன், திரு.வி.க. எங்கே போக வேண்டும் என்பதையெல்லாம் கேட்டார். இவ்வளவுதூரம் வந்த பிறகு எதையும் மறைக்க முடியாமல், நடந்தவற்றையெல்லாம் கூறிவிட்டேன். என்னுடன் பேசிக்கொண்டேயிருந்த அவர், எப்படி, யாரிடம் உத்தரவிட்டாரென்று தெரியவில்லை. ஆனால் ஒரு வெள்ளித் தட்டில் நெய் வழிந்து ஓடஓட வெண்பொங்கலும், கத்திரிக்காய்க் கொச்சும் வந்து சேர்ந்தன. என்னை உண்ணுமாறு பணித்தார். நான் உண்டுகொண்டு இருக்கும்போதே ஒட்டுநரை அழைத்தார். “மானேஜரிடம் கேட்டு ஒரு பத்துக் கூப்பன் வாங்கிக் கொள்; அதற்குரிய பணத்தையும் வாங்கிக் கொள்; இந்தப் பிள்ளையாண்டான் கூடப் போ, கல்யாணசுந்தரம் வருவான். அவனையும் ஏற்றிக் கொண்டு, எங்கே போகவேண்டுமோ போ, அங்கே போய் இறங்கிக்கொண்டு உன்னை வீட்டுக்குப் போ என்ற சொல்வான். அப்படி நீ வந்தால் உன் வேலை போய்விடும். எவ்வளவு நாழியானாலும் பரவாயில்லை. எல்லா வேலையையும் முடித்துக்கொண்டு திரும்பி, அவனை வீட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டு, அப்புறம் தான் நீ இங்கு வரவேண்டும்” என்று ஆணையிட்டார். என் பக்கம் திரும்பி “நான் வண்டியில் ஏறிப் புறப்படத் தயாராக