பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120 ♦ நான் கண்ட பெரியவர்கள்


இருந்தேன் என்பதைமட்டும் அவனிடம் சொல்லாதே; சொன்னால் வண்டியைத் திருப்பி அனுப்பி விடுவான். என்ன, நான் சொல்றது புரியுதா? போ” என்றார்.

அவர் வண்டியில் ஏறிக்கொண்டு புறப்பட்டேன். இப்படி ஒரு மாமனிதரை அதற்குமுன் நான் சந்தித்ததேயில்லை. சின்னையாவின் வீட்டுக்கு வந்ததும் அவரையும் ஏற்றிக்கொண்டு பெரம்பூர் சென்று, தொழிற்சங்கக் கட்டடத்திற்கு 100 கஜம் முன்னரே வண்டியை நிறுத்திவிட்டோம். காரணம் சாலையின் இரண்டு பக்கமும் பெருங்கூட்டம் நின்றிருந்தது. மலைப் பிஞ்சுகள் (கற்கள்) இங்குமங்குமாகப் பறந்து கொண்டிருந்தன. இவ்வளவு பெரிய வண்டி வந்து நின்றுவிட்டதைப்பற்றி யாரும் கவலைப்பட்டதாகக் தெரியவில்லை. இந்த நிலையில் பின்னிருக்கையிலிருந்த சின்னையா மெல்ல இறங்கினார். காரின் முன்புறம் சென்றார். அதிசயம் நிகழ்ந்தது. சரமாரியாக இங்குமங்கும் பறந்துகொண்டிருந்த கற்கள் திடீரென்று நின்றுவிட்டன. ‘தலைவர் வந்துவிட்டார்; தலைவர் வந்துவிட்டார்’ என்று ஒரே கூக்குரல். இறங்கிய அந்த மாமனிதர், நடந்த கூத்துக்கள் அத்தனையையும் கண்ணால் பார்த்துக் கொண்டேதான் இருந்தார்.

தம் எதிரேயும், சுற்றியும் வந்து வளைத்துக் கொண்ட கூட்டத்தினரை, என்ன ஏது என்று ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் ‘எல்லாரும் உள்ளே வாங்க’ என்றார். கருடனைக் கண்ட நாகம்போல ஒரு இரைச்சலும் இல்லாமல் இரண்டு கூட்டத்தாரும் ஒன்றாக உள்ளே நுழைந்து அமர்ந்தனர். ஒரேயொரு மேசை, நாற்காலிதான் இருந்தது. சின்னையா அதில் அமர்ந்தார். வெள்ளைத் தாளையும் ஒரு பென்சிலையும் கொண்டு வரச் சொல்லி, மேசையில் வைத்துக்கொண்டார். “கூச்சலில்லாமல் ஒவ்வொரு பதவிக்கும் ஒருவரைச் சொல்லுங்கள்” என்று