பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்த் தென்றல் திரு.வி.க ♦ 123


பேசிக்கொண்டேயிருந்தனர். மோர் வைத்திருக்கும் கண்ணாடித் தம்ளருள் பச்சை நிறம் காணப்பட்டது. எடுத்துக் குடித்துப் பார்த்தேன். பச்சை மிளகாயை நன்றாக அரைத்து மோரில் கலந்திருந்தனர். காரத்தை மிகுதியாகச் சாப்பிடும் எனக்கே அந்த மோரைக் குடிக்க முடியவில்லை. மிளகாய் என்று பெயர் சொன்னாலே சின்னையாவுக்கு அலர்ஜி வந்துவிடும். இந்தத் தம்ளர் மோரிலுள்ள பச்சை மிளகாய் மூன்று ஜென்மங்களுக்குப் போதுமானது. விருந்து படைக்கும் முதலியார் எதிரே இருக்கிறார். ஆகவே சின்னையாவைப் பார்த்து ‘முதலியார் அன்பு முழுவதும் இந்த மோரில் கரைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இது உங்களுக்கு வேண்டாம்’ என்றேன். இதைக் கேட்டுக் கொண்டிருந்த முதலியார் எழுந்துவிட்டார். “ஐயாவுக்கு மோர் என்றால் உயிர். அது தெரிந்துதானே ஏற்பாடு செய்திருக்கிறேன். அவரைக் குடிக்க வேண்டாமென்று சொல்கிறீர்களே, அது நியாயமா?” என்றார். இனி ஒளித்துப் பேசுவதில் பயனில்லை என்று நினைத்த நான், ”ஐயா இதில் நிரம்ப மிளகாய் கலந்திருக்கிறது. சின்னையாவின் உடலுக்கு இது ஆகவே ஆகாது. தயைகூர்ந்து விட்டுவிடுங்கள்” என்றேன். ”ஐயா அவர்களுக்கு மிகப் பிரியமான இந்த மோரைக் குடித்தாலொழிய எனக்குத் திருப்தி ஏற்படாது” என்றார் அந்தப் புண்ணியவான். எனக்குக் கோபம் தலைக்கு மேல் ஏறிவிட்டது. இலையிலிருந்து எழுந்திருக்க முயன்ற என்னை, சின்னையா கையைப் பிடித்து உட்காரச் செய்துவிட்டார். “நீ சும்மாயிருடா” என்று சொல்லியும் அந்தப் புண்ணியவான் விடவில்லை. “ஐயா எப்படியாவது மோரைக் குடியுங்கள்” என்று அழாக்குறையாய் வேண்டினார்.

திரு.வி.க என்ற மாமன்னிதரின் மற்றொரு பக்கம் இந்த விநாடி வெளிப்பட்டது. திரு.வி.க. அவர்கள் என் கையைப் பிடித்த பிடியை விடவேயில்லை. விட்டிருந்தால் அந்தக்