பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124 ♦ நான் கண்ட பெரியவர்கள்


கண்ணாடித் தம்ளரையும் மோரையும் விசிறி அடித்திருப்பேன். என்னை ஒரு கையால் பிடித்தபடியே மற்றொரு கையால் மிளகாய் கலந்த அந்த மோரை, இல்லை மோர் கலந்த மிளகாயை, ஒரே மூச்சில் குடித்துவிட்டுத் தம்ளரை வைத்துவிட்டார். விருந்து உபசரணை செய்த அந்த முதலியாரின் அறியாமையும், முட்டாள்தனமும் நிரம்பிய அன்பு, சின்னையாவை மூன்று மாதங்கள் படுக்கையில் கிடத்தியது. சின்னையாவின் பணி நாட்டிற்கு இன்னும் தேவை என்று தில்லைக்கூத்தன் அவரைப் பிழைக்குமாறு செய்தான்.

திரு.வி.க.வின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதென்று முடிவு செய்யப்பெற்றது. குருதேவர் தெ.பொ.மீ. அவர்கள் விழாக்குழுவின் செயலாளர். நான் துணைச் செயலாளர். பெரிய கூட்டங்கள் இரண்டு மூன்றிற்கு ஏற்பாடு செய்தோம். ஆனால், அறுபது ஆண்டு நிரம்பிய அந்த நன்னாளில் (1941) திருப்போரூர் சென்று முருகப்பெருமானுக்கு அபிடேக ஆராதனைகள் செய்து, அன்று மதியம் அங்கேயே உணவு உண்ண வேண்டும் என்பது சின்னையாவின் விருப்பம். அதைத் தெரிந்து கொண்ட ம.பாலசுப்பிரமணிய முதலியார், கீ.தெய்வசிகாமணி முதலியார் ஆகியோர் அவ்வாறே செய்யலாம் என்று ஏற்றுக்கொண்டனர். எவ்வாறு அங்கே செல்வது என்று சிந்தித்த போது, சின்னையா அவர்கள் ஒரு புதிய யோசனையை வெளியிட்டார். அங்கே செல்வதற்கென்று அறுபது நபர்கள் தயாராக இருந்தனர். எனவே, இரண்டு படகுகளை அமர்த்தி முப்பது முப்பது பேராக அதிலே ஏறிக்கொண்டு பக்கிங்ஹாம் கால்வாய் வழியாகத் திருப்போரூர் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. கால்வாயிற் தண்ணீர் அதிகமில்லை யாதலால் படகின் நுனியில் கயிற்றைக் கட்டி ஆற்றின் இரு கரைகளிலும் ஆட்கள் நின்றுகொண்டு படகை இழுத்துச்