பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்த் தென்றல் திரு.வி.க. ♦ 125


சென்றார்கள். இரு படகுகளும் திருப்போரூர் சென்றடைந்தன. அபிடேக ஆராதனைகள் சிறப்பாக நடந்தேறின. ம.பா. அவர்கள் முதல் விழாக் கூட்டத்தை அங்கேயே தொடங்கிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். யார்யாரைப் பேசச் சொல்வது என்றெல்லாம் சிந்தித்து ஒரு பத்துப் பேரைப் பட்டியலிட்டுக்கொண்டார். அந்தப் பட்டியலை எடுத்துச் சென்று ஒரு ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்த திரு.வி.க. அவர்களிடம் காட்டினார். “ஒரு கூட்டமும் நடத்த வேண்டாம் போ” என்று கூறிவிட்டார் சின்னையா. அதன் கருத்தைப் புரிந்தகொண்ட ம.பா. மேல் வேட்டியை இடுப்பில் கட்டிக்கொண்டு, அவரை வணங்கி, “முருகன் சந்நிதானத்தில் முதற் கூட்டம் நடைபெறவேண்டும். நீங்கள் யார்யாரைப் பேசவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்கள்மட்டும் பேசட்டும்” என்றார். அதன்படியே ஒரு பத்துப் பேரை ஏற்பாடு செய்தார் ம.பா. அங்கிருந்தவர்களிலெல்லாம் இ.தெய்வசிகாமணி முதலியார்தான் வயதில் மூத்தவர். எனவே, அவரைத்தான் தலைவராகச் சின்னையா இருக்கச் சொல்வார் என்று நினைத்த ம.பா., சின்னையாவிடம் சென்று தலைவராக யாரைப் போடுவது என்று விநயமாகக் கேட்டார். “நான் சொல்பவரைப் போடவா போகின்றீர்கள்? உங்கள் இஷ்டம் போல் யாரை வேண்டுமானாலும் போட்டு நடத்திக் கொள்ளுங்கள்” என்று சீறினார். ம.பா. அவர்கள் “முருகன் திருமுன்னர் நடைபெறும் இந்த விழாவில் தாங்கள் எது விரும்பினாலும் அதையே செய்வது என்று முடிவு செய்து விட்டோம். யார் தலைவரென்று நீங்கள் சொல்கிறீர்களோ அவரையே வைத்து நடத்துகிறோம்” என்றார். கீ.தெய்வசிகாமணி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தி.கி.நாராயன சாமி நாயுடு, கசச்சிதானந்தம் பிள்ளை, நான் உள்பட அனைவரும் நின்றுகொண்டிருக்கிறோம். சின்னையா என்ன சொல்லப்போகிறாரோ என்று ஆவலுடன் பார்த்துக்