பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126 ♦ நான் கண்ட பெரியவர்கள்


கொண்டிருக்கிறோம். ம. பா. அவர்கள் மறுபடியும் “தங்கள் கருத்துத்தான் முடிவானது. ஆகவே, தங்கள் கருத்தைச் சொல்லலாம்” என்றவுடன், சின்னையா, “இராசம்மாள்தான் இதற்குத் தலைமை வகிக்க வேண்டும். யார்யார் அவள் தலைமையின் கீழ்ப் பேச ஒத்துக்கொள்கிறீர்களோ, அவர்கள்மட்டும் பேசினாற் போதும்” என்று கூறி முடித்தார்.

இந்தக் கூட்டத்தில் இந்தப் பெயருடையவர் யாரென்று தெ.பொ.மீ.யையும் என்னையும்தவிர வேறு எவரும் அறியார். அது யாரென்று ம.பா. அவர்கள் கேட்க, திரு.வி.க. அவர்கள் சிரித்துக்கொண்டே “சம்பந்தனின் மனைவி” என்றார். அக்கட்டத்தில் வயதில் மிகக் குறைந்தவள் அவள்தான். இப்பெயரைக் கேட்டவுடன் பலர் திகைப்படைந்திருக்கலாம். அடுத்துத் திரு.வி.க. அவர்களே “அப்பெண்ணின் தலைமையில் யார்யார் பேச ஒப்புக்கொள்கிறீர்களோ அவர்கள்மட்டும் பேசினால் போதும்” என்றார். இது பொதுவாகச் சொல்லப் பட்டதேனும், திரு.வி.க. அவர்கள் தெய்வசிகாமணி முதலியாரைப் பார்த்துத்தான் இதனைச் சென்னார். ஒரு விநாடிகடத் தாமதிக்காமல் “அப்பெண்ணின் தலைமையில் நானே முதலில் பேசுகிறேன்” என்றார் தெய்வசிகாமணி முதலியார்.

அடுத்துச் சச்சிதானந்தம் பிள்ளை, தெ.பொ.மீ., ம.பா., நாராயணசாமி நாயுடு ஆகிய அனைவரும் பேச ஒப்புக் கொண்டனர். தெய்வசிகாமணி முதலியார் என்னைப் பார்த்து “என்னப்பா இந்தப் பட்டியலில் கடைசியாகப் பேசவேண்டியவன்” என்றார். இக்காலத்தில் இதிலொன்றும் புதுமையில்லாமல் இருக்கலாம். ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் பதவியிலிருந்து ஓய்வுபெற்றவரும், எண்பது வயதானவரும் ஆகிய தெய்வசிகாமணி முதலியார் போன்றவர்கள் இருபத்து நான்கே வயது நிரம்பிய ஒரு பெண்ணின் தலைமையில்