பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


20. பெரியார் ஈ.வே.ரா.


தொடக்கத்தில் பெரியார் அவர்களைப்பற்றியும் அவர் பண்பாடுபற்றியும் அறிந்துகொள்ள நான் முயலவில்லை. அன்றியும் பிள்ளையார் சிலை உடைப்பு இராமாயண எதிர்ப்பு முதலியவற்றால் என் மனம் பெரிதும் வெறுப்புக் கொண்டிருந்தமையின் அவரைப்பற்றி நல்லமுறையில் சிந்திக்க எனக்கு வாய்ப்பே இல்லை. ஆனால், பெரியார் திரு.வி.க.விடம் வந்துபோன பொழுதெல்லாம் சின்னையா அவர்கள் அவருடைய பண்பாடுபற்றிப் பெரிதாகப் பேசுவார். அவருடைய கொள்கைகளை விட்டுவிட்டு மனிதர் என்ற முறையில் பார்த்தால் அக்காலத்தில் அவருக்கு ஈடிணையான பண்பாளரைக் காண்பது கடினம் என்று அடிக்கடி சின்னையா சொல்வார்கள். அன்றியும் பல்கலைச்செல்வர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் அவர்களும் பெரியாரின் பண்பு நலன்களைப் பலமுறை எடுத்துப் பேசியது என்னைச் சற்று மாற்றியது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொடர் சொற்பொழிவு செய்ய ஏற்றுக் கொண்ட பல்கலைச் செல்வர், பெரியாரின் கொள்கைகளில் சிறப்பானவற்றைத் தனியே எடுத்துச் சொல்லி அச்சொற்பொழிவின் முடிவில் பெரியாரின் பண்பு நலன்களையும் மிக அற்புதமாக எடுத்துப் பேசினார். அதனைக் கேட்ட பிறகு என் மனத்தின் பெரும்பகுதி மாறிவிட்டது. ஆனாலும் பெரியார் அவர்களை நேரிற்கண்டு பேச வாய்ப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் தமிழ்த்தென்றலின் இறுதி ஊர்வலத்தில் பெரியார் அவர்கள் நடந்துகொண்ட முறையை நேரிற் கண்ட பின்னர் அப்பெருமகனார் பற்றித் திரு.வி.க. அவர்களும்,