பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


21. குருதேவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்


பல்கலைச்செல்வர், பன்மொழிப் புலவர், தென்பட்டினம் பொன்னுசாமி மீனாட்சி சுந்தரனார் அவர்களை முதன்முதலில் பார்ப்பவர்கள், இந்த அடைமொழிகளுக்கெல்லாம் அவர் பொருத்தமானவரா என்று ஐயுறுவர். இருபத்தாறு வயதில் ‘சேக்கிழாரும் திருக்கண்ணப்பரும்’ என்ற 480 பக்கமுள்ள ஓர் ஆராய்ச்சி நூலை எழுதியவர் இவர்தான் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். என்ன காரணத்தாலோ அந்த அறிவுக் கடலின் பிரதிபலிப்பு முகத்தில் காணப்பட்டதேயில்லை.

1901இல் பிறந்த இப்பெருமகனாரை 1932இல் திரு.வி.க. அவர்களுடன் முதன்முதலில் காணநேர்ந்தது. ‘சம்பந்தா! இவர்தான் பல்கலைச்செல்வர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார். இவரை நீ தெரிந்துகொள்ள வேண்டும்’ என்று அறிமுகம் செய்துவைத்தார் திரு.வி.க. அத்தோடு அவர் நிறுத்தவில்லை. “நம்ம அ.மு.சரவண முதலியாரின் மகன் இவன்; நல்லாப் பேசுவான். இன்று மாலை நீங்க ரெண்டு பேரும் பேசப்போறீங்க” என்றும் அறிமுகம் செய்துவைத்தார். இத்தனைக்கும் தெ.பொ.மீ. என்ற அந்தப் புண்ணியவான் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசவும் இல்லை; சின்னய்யா சொன்னதைக் காதில் வாங்கிக்கொண்டதாகவும் தெரியவில்லை. வேடிக்கை என்னவென்றால், தெ.பொ.மீ. அவர்களின் கண்கள் என்மேல்தான் பதிந்திருந்தன. ஆனால் அவர் இந்த உலகத்தில் இல்லை. அந்த நேரத்தில் ‘சின்னையா இவ்வளவு சொல்லியும் இவர் என்னை ஒரு பொருட்டாக மதித்துச் சட்டை செய்யவில்லையே! இப்படியும் ஒரு மனிதரா?’ என்ற எண்ணம் என் மனத்தில்