பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குருதேவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ♦ 147


பொடிக்கு அல்லது புகையிலைக்குக்கூடச் சம்பாதிக்க வழியில்லாதவர்கள் தமிழ்ப் பேராசிரியர்கள் என்று வெளிவருவது வருந்தத் தக்க விஷயம்” என்று பேசினார். வேடிக்கை என்னவென்றால், குருதேவர் இந்தக் கூட்டத்தில் இருந்தார். சாஸ்திரியார் சொன்னதைக் கேட்டு இவரும் சிரித்தார். சாஸ்திரியார் சுட்டிப் பேசியது தம்மைத்தான் என்ற உண்மை குருதேவர் மூளையில் ஏறவேயில்லை. ஆனால், பி.சா.சு.வின் இந்தத் தரக் குறைவான பேச்சு குருதேவரைப் பற்றியதுதான் என்பதை அறிந்துகொண்ட நண்பர்கள் குருதேவரை உசுப்பிவிட்டார்கள். சாஸ்திரியாரை ஒட்டி வெளியே வந்த குருதேவர் சாலையில் நின்றுகொண்டு 'பிசாசு' வருவதை எதிர்பார்த்து நின்றார். சாஸ்திரியாரைக் கண்டவுடன் “டே சுப்பிரமணியா, நீ என்னமோ சொன்னாயாமே. உனக்கோ தமிழும் தெரியாது; சமஸ்கிருதமும் தெரியாது. ஆனாலும் உன்னைத் தாங்குகின்றவர்கள் - இருக்கத்தான் செய்கிறார்கள். மகாராஜனாக இரு. ஆனால், பிறத்தியாரைப்பற்றி ஏன் இப்படிப் பேசுகிறாய்? நீ வடமொழி வல்லவன் என்று சொல்லிக்கொள்கிறாய். நானோ வக்கீல். தமிழும் தெரியாது; வடமொழியும் தெரியாது என்கிறாய். இப்போது ரிக்வேதத்தை ஒலி பிறழாமல் நான் சொல்கிறேன். உன்னால் முடியுமா?” என்று சொல்லவும், கூட்டம் கூடிச் சாஸ்திரியாரை மெள்ள அழைத்துச் சென்றுவிட்டார்கள். அன்று, சாஸ்திரியாரின் மகனுக்கு டைபாய்ட் ஜூரம் பீடித்த 13-வது நாள். நிலைமை மோசமாகி விட, டாக்டர் “நான் ஒன்றும் செய்யமுடியாது; பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டார். இந்த நிலையில் ஒரு சிலர் சென்று, சாஸ்திரியாரிடம் ‘ஏனய்யா, இப்படிப் பாவம் பண்ணிவிட்டாய்? பக்கத்து வீட்டில் இருக்கும் மீனாட்சி சுந்தரம் நவாவர்ணப் பூசை செய்யும் சக்தி உபாசகர். அவர் வாயில் விழுந்துவிட்டாய். போ, எப்படியாவது அவர்