பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150 ♦ நான் கண்ட பெரியவர்கள்


நன்கு அறிவார் திரு.வி.க. ‘நவாவர்ணப் பூசை’ செய்யும் தெ.பொ.மீ.யையும் நன்கறிந்த திரு.வி.க. இவர்கள் இருவரும் சந்தித்தால் ஒத்துப்போவது கடினம் என்பதை உணர்ந்துகொண்டார். ஆதலின் ஏதேதோ சொல்லித் தட்டிக்கழிக்கப் பார்த்தார். ஆனால் முதலியார் விடுவதாக இல்லை. ‘சனிக்கிழமை காலை காருடன் வருகிறேன்; நாம் அனைவரும் போகலாம்’ என்று கூறிவிட்டுப் போய்விட்டார். அவர் போன பிறகு திரு.வி.க. அவர்களுக்கு ஒரே குழப்பம், அதுவும் காலை நேரத்தில் அவர் பூசை முடிந்தவுடன் இருக்கும் நிலைமையைத் திரு. முதலியார் அவர்களிடம் சொல்லிவிடலாம் என்று நான் கூறியதை, திரு.வி.க. அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் சனிக்கிழமை காலை மூவரும் சிந்தாதிரிப்பேட்டைக்குப் போய்ச் சேர்ந்தோம்.

வீட்டில் உள்ளவர்கள் தெ.பொ.மீ. அவர்கள் இன்னும் பூசை முடிக்கவில்லை; நீங்கள் அமருங்கள் என்று கூறியதால், வீட்டின் திண்ணையில் அமர்ந்தோம். பதினைந்து, இருபது நிமிடங்களில் வழக்கம்போல் தாடையைத் தடவிக் கொண்டே தெ.பொ.மீ. வெளியே வந்தார். உடனே திரு.வி.க., ‘மீனாட்சிசுந்தரம்! இது யாரென்று பார், இவர்தான் கீ. தெய்வசிகாமணி முதலியார்; பத்திரப்பதிவுத் துறையில் ஐ.ஜி. (I.G.of Registration) பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்; உன்னைப் பார்க்கவேண்டுமென்று பெரிதும் விரும்பினார்’ என்று ஏதேதோ கூறினார். வழக்கம்போல் தெ.பொ.மீ.யின் காதுகளில் எதுவும் ஏறவில்லை. தாடையைத் தடவிக் கொண்டே, எங்கேயோ பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தார். தெ.பொ.மீ. தம்மை அவமானப்படுத்தி விட்டதாக நினைத்த முதலியார் ‘கல்யாண சுந்தரம் புறப்படு போகலாம், இந்த மனிதனை நாடிவந்ததே பெரிய தப்பு’ என்று கூறி, எழுந்து காருக்குச் சென்றுவிட்டார். வேறு வழியின்றித் திரு.வி.க.வும் காரில்