பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156 ♦ நான் கண்ட பெரியவர்கள்



ஒரு முறை- அன்று அறநிலையத்துறையில் துணை ஆணையராக இருந்த நண்பர் அர்ஜுனன் அவர்கள் மருவத்தூர் செல்ல வேண்டுமென்று எங்களை அழைத்தார். அவருடைய காரிலேயே புறப்பட்டோம். வண்டியின் முன்னிருக்கையில் ஓட்டுநர் அருகே குருதேவர் அமர்ந்திருந்தார். பின்னிருக்கையில் நானும் திரு.அர்ஜுனனும் அவருடைய மனைவியும் அமர்ந்திருந்தோம். திடீரென்று அர்ஜுனன் குருதேவரைப் பார்த்து ’இந்த மருவத்துரைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்று கேட்டார். ‘எனக்கு என்னப்பா தெரியும்?’ என்று விடை கூறிவிட்டார், குருதேவர்.

அடுத்தபடியாக அர்ஜுனன் ‘பங்காரு அடிகளார் மேல் ஒரு பெண் சித்தர் பரகாயப் பிரவேசம் செய்து அருள்வாக்குச் சொல்லச் சொல்கிறாளா? அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’ என்றார். உடனே குருதேவர் ’எனக்கு என்னப்பா தெரியும்? எனக்கு ஒன்றுமே தெரியாது’ என்றார். நண்பர் அர்ஜுனன் மந்திர சாஸ்திரங்களில் ஓரளவு வல்லவர். அவர், என் காதருகே நெருங்கி, ‘என்ன, அ.ச. குருதேவர் பெரிய அறிஞர்; பன்மொழிப் புலவர்; என்பதெல்லாம் சரி. ஆனால் ஆன்மிகத் துறையில் பூஜ்யம், பெரிய பூஜ்யம் (a big spiritual zero ) போலத் தெரிகிறதே!’ என்றார். நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. சிரித்துக்கொண்டே இருந்துவிட்டேன். கோயிலில் ‘அருள் வாக்கு’த் தொடரும் நேரம். அருள்வாக்குக் கேட்கப் பெயர் கொடுத்தவர்கள் எல்லாம் வரிசையாக நின்றுகொண்டிருக்கிறார்கள். அருள்வாக்குச் சொல்லும் அறையில் இருந்து திடீரென்று ஒரு பெரிய குரல். ‘யாரடா அங்கே? கோயில் வேலை செய்யும் பயலை இங்கு வரச் சொல்’ என்ற சத்தம் வந்தவுடன் நாங்கள் பேசாமல் நின்றுவிட்டோம், அண்மையில் நின்ற திரு.ஜோசப், அர்ஜுனனிடம் வந்து ’உங்களைத்தான் அம்மா