பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குருதேவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ♦ 157


அழைக்கிறாள், போங்க’ என்றார். பயந்து நடுங்கியபடியே உள்ளே சென்று அவர் கும்பிட்டார். பலத்த குரலில் ‘அடே தாடிக்காரனைப் பற்றி (தெ.பொ.மீ) நீ என்னடா சொன்னே’ என்று கர்ஜித்தது. பாவம் அர்ஜுனன் நடுங்கிவிட்டார். ‘நான் ஒன்றும் சொல்லவில்லை?’ என்றார். ‘காரில் வரும்போது, தலைவனுடைய (அ.ச.ஞா) காதில் என்ன சொன்னாய்? தாடிக்காரன் பெரிய ‘Spiritual Zero’ என்று சொன்னாயல்லவா? நான் யார் என்று கேட்டாயில்லையா? அவன் தெரியாது’ என்றான். அதுதான் அவன் பெருமை. நீ எது கேட்டாலும் அவன் தெரியாது என்பான். இந்தப் பகுதியில் என்னை ஓரளவு தெரிந்துகொண்ட ஒரே ஓர் ஆள் தாடிக்காரன்தான். அட்டமாசித்திகள் எல்லாம் செய்வானடா அவன். ‘நானே ஒரு தடவை இந்தச் சித்திகளெல்லாம் உனக்கு வரும். நீ செய்யடா’ என்றேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா?, ‘ஏம்மா, வேறு வேலையில்லையா? அதைச் செய்வதற்காகவா நான் உன்னிடம் வந்தேன்?’ என்று சொல்லி உதறிவிட்டான். அப்படிப்பட்டவனை நீ என்ன சொன்னே? ஆன்மிகப் பூஜ்யமா? போடா போ அவனைவிட ஆன்மிக வளர்ச்சியடைந்தவனை நீ எங்குத் தேடினாலும் காண முடியாது’ என்று கூறிவிட்டாள் அன்னை. அன்னை கூறிய அனைத்துச் சொற்களும் எங்கள் அனைவர் காதிலும் விழுந்தன. எங்கள் பக்கத்திலேயே நிற்கும் குருதேவர் காதில்மட்டும் இந்தச் சொற்கள் எதுவும் விழவில்லை. அவர் எங்கோ மோட்டு வளையைப்பார்த்துக் கொண்டே நின்றுகொண்டிருந்தார். அவர் முகத்தில் எவ்வித மாறுதலும் இல்லை. வெளியே ஒடி வந்த அர்ஜுனன் திடிரென்று அவர் கால்களில் விழுந்தார். ‘குருதேவா, என்னை மன்னியுங்கள்’ என்று அழாக்குறையாக வேண்டினார். அன்னையின் உரையாடலைக் காதில் வாங்கிக்கொள்ளாததால்