பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளல் ம.வே.ஜெயராமன் ♦ 165





அதன் பிறகு, மிக நெருங்கிப் பழகினோம். முதல் சந்திப்பு நிகழ்ந்த இரண்டு மாதங்களில் அவர் என்னைப் பங்களூருக்கு அழைத்திருந்தார். விமானத்தை விட்டு இறங்கியதும் விமான நிலையத்திற்கு வந்திருந்த அவர் மகனார் என்னை இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். நான் வீட்டிற்குள் நுழைகின்ற நேரத்தில் ஜெயராமன் அவர்கள் உரத்த சத்தத்துடன் யாரையோ கோபித்துக் கொண்டிருந்தார். பல கடினமான வார்த்தைகள் சொல்லி யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். என்னைக் கண்டவுடன் ‘வாங்க, வாங்க உள்ளே வந்து உட்காருங்கள்’ என்று சொல்லிவிட்டு, அவர் திட்டும் பணியைத் தொடர்ந்தார். என்னையும் அறியாமல் ‘ஜெயராமா, நீங்கள் செய்வது சரியில்லை, தயவுசெய்து உள்ளே வாருங்கள்’ என்று சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டேன். திடீரென்று ஓர் அம்மையார் வீட்டினுள்ளே வந்திருந்து எனக்கு வணக்கம் செலுத்தினார். அவர் யார் என்று தெரியாமையால், “தங்களை யார் என்று தெரிந்து கொள்ளவில்லை” என்றேன். அப்போது அந்த அம்மையார் சொல்லிய வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. “நான் அவருடைய மனைவி. நூற்றுக் கணக்கானவர்கள் தினந்தோறும் இங்கு வருகிறார்கள். இவர் கொடுக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு வருபவர்கள் ஆதலால், இவர் என்ன மனநிலையில் இருந்தாலும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், தங்கள் காரியத்தை முடித்துச் செல்வார்கள். முதன்முதலாக, எங்கள் வீட்டிற்கு வரும் நீங்கள் என் கணவரைப் பார்த்து ‘ஜயராமா, நீங்கள் செய்வது சரியில்லை என்று சொன்னதைக் கேட்டதும் என் வியப்புத் தாங்கவில்லை’ என்று கூறினார். எனக்கும் வியப்பாக இருந்தது. ஜெயராமன் உள்ளே வந்ததும், பின்வருமாறு கூறினேன். ‘ஐயா, உங்களுடன் இரண்டு மாதப் பழக்கம்தான் எனக்கு இங்கே வருபவர்கள் எப்படி