பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172 ♦ நான் கண்ட பெரியவர்கள்


வந்திருக்கிறான். அவனைப் போய் என்ன கேட்பது?’ என்று சொல்லியது என் காதில் விழுந்தது. இந்த உரையாடல் நடந்திராவிடில் நானே அவர்களிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பேன். ஆனால், இப்போது நிலைமை மிஞ்சிவிட்டது. எங்கேயோ பார்த்துக் கொண்டிருப்பதுபோல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பயணிகள் அனைவரையும் விசாரித்த பிறகு வேறுவழியின்றி என்னிடம் வந்து ’நீங்கள்தான் அ.சவோ?’ என்றனர். ‘ஆம். நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் அச நான்தான்’ என்றேன். பிறகு என்னை அழைத்துச் சென்றார்கள். அப்போதுதான் முதன்முறையாகச் சர். கந்தையாவைப் பார்க்கமுடிந்தது. இதற்கு முன்னர் யாழ்ப்பாணம்வரை சென்று சொற்பொழிவுகள் செய்துவிட்டுச் சென்னை திரும்பியிருக்கிறேன். கொழும்புவுக்குச் சென்றது இதுதான் இரண்டாவது முறை. 1938இல் நாட்டார் ஐயா அவர்களுடன் சென்றபொழுது இவர்களையெல்லாம் சந்திக்கவில்லை. பல ஊர்களுக்கும் சென்று திரும்பும் எனக்கு இது ஒரு புதிய அனுபவம். என்னுடைய வடிவம் மட்டுமல்லாமல் நான் அணிந்திருந்த புஷ்கோட்டும் அவர்கள் ஏமாறுவதற்கு உதவியாக இருந்தது.

இதன்பிறகு பலமுறை கொழும்பு சென்று பத்து நாட்கள் சொற்பொழிவுகள் செய்துவிட்டு, மீண்டு வருவது உண்டு. ஆனாலும் 1945 ஆம் ஆண்டு பயணத்தின்போது சில புதிய அனுபவங்கள் கிடைத்தன. சைவ மங்கையர் கழகம் என்ற பெயருடைய பெரிய ஹாலில் கூட்டம் தொடங்கிற்று. முதல் இரண்டு வரிசை நாற்காலிகள் ஏறத்தாழக் காலியாக இருந்தன. கூட்டம் தொடங்குமுன் சிலர் கையில் எரியும் சுருட்டுடன் உள்ளே நுழைந்தனர். முன்னிருந்த நாற்காலிகளில் அமர்ந்துவிட்டனர். ஆனால், பெரியபுராணம் முதலிய சமய இலக்கியங்கள் பேசப்பெறும் இடத்தில் எரியும் சுருட்டைக் கையில் வைத்துக்